a

பாஜகவிற்கு தண்ணி காட்டும் ரங்கசாமி – புதுவை அரசியலில் தொடரும் பரபரப்பு…!


புதுச்சேரியில் சட்டமன்றம் தேர்தல் முடிவு வெளியாகி ஒரு மாதம் ஆக உள்ளது ஆனாலும் இன்னும் அமைச்சரவை அமைக்க முடியவில்லை.

இந்த நிலையில்தான் சட்டமன்ற பாஜக கட்சித் தலைவர் நமச்சிவாயம் மற்றம் பாஜக பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வமும் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் நட்டவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

பாஜகவிற்கு சபாநாயகர், துணை முதலமைச்சர் உட்பட மூன்று அமைச்சர்கள் ஒதுக்க வேண்டும் என்பது அக்கட்சியின் நிலைப்பாடு.

இதற்கு ஒத்து வராத என்.ஆர்.காங்கிரஸ் அக்கட்சிக்கு இரண்டு அல்லது மூன்று அமைச்சர்கள் மட்டுமே தர சம்மதித்து உள்ளதாக கூறப்படுகிறது.

Also Read  புதுச்சேரி நிலவரம்: என்.ஆர்.காங்கிரஸா…! காங்கிரஸா…!

அமைச்சரவை இறுதி செய்வதற்காக பாஜகவினர் முதலமைச்சர் ரங்கசாமி தொடர்பு கொள்ள முயற்சி செய்வதாகவும், முதலமைச்சர் தரப்பிலிருந்து தங்களை சந்திப்பதை திட்டமிட்டு தவிர்ப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.

30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்தில் என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் பாஜக 6 தொகுதிகளையும் கைப்பற்றி ஆட்சி அமைக்க முடிவு செய்தது.

Also Read  “அகில இந்திய கட்சி, இங்க வந்து அடிமைத்தனமா பிச்சை எடுக்கிறது கஷ்டமா இருக்கு” - சுப்ரமணியன் சுவாமி

இந்த நிலையில் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேர் ஆதரவு மற்றும் நியமனம் எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேர் ஆதரவு என பாஜகவிற்கு தற்போது 12 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சராக உள்ள என்.ஆர்.ரங்கசாமி கட்சி பெற்ற 10 தொகுதியை விட பாஜகவிற்கு தற்போது பலம் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாகவே சபாநாயகர் மற்றும் துணை முதலமைச்சர் உள்ளிட்ட உட்பட மூன்று அமைச்சர்களை பாஜக கேட்கிறது.

Also Read  10 ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு மதிப்பெண் கணக்கிடும் முறை…!

கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக உள்ள சூழ்நிலையில் நிவாரண பணிகளை மேற்கொள்ள கூட அமைச்சர்கள் இல்லாமல் இருப்பது மக்களை கோபமடைய செய்திருக்கிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திமுக பொருளாளர் பதவிக்கு நாங்கள் போட்டியிடப் போவதில்லை, ராசா, கனிமொழி அறிவிப்பு

Tamil Mint

திமுகவினருக்கு ஸ்டாலின் வைத்த திடீர் வேண்டுகோள்…!

Devaraj

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் காலமானார்!

Tamil Mint

ஒரு தாயின் உணர்வுகளை ஏற்று உடனே விடுப்பு அளித்த முதல்வருக்கு நன்றி.. அற்புதம்மாள் ட்வீட்..

Ramya Tamil

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் இன்று தொடங்குகிறது

Tamil Mint

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

Tamil Mint

“ஆன்லைன் வகுப்புகள் ரெக்கார்ட் செய்யப்பட வேண்டும்” – முதலமைச்சர் அதிரடி!

Lekha Shree

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?

Tamil Mint

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ…… கைது செய்த காவல்துறை….

Devaraj

தொடரும் ஈபிஎஸ்-ஓபிஎஸ் பூசல்? – போஸ்டரால் பரபரப்பு..!

Lekha Shree

கத்தரி வெயிலுக்கு மத்தியில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை…!

sathya suganthi

100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் – அமைச்சர் சேகர் பாபு அதிரடி

sathya suganthi