பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் ஜனவரி 4-ம் தேதி தொடக்கம்…!


பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை ஜனவரி 4ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2002ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்நிலையில் ஜனவரி 4ஆம் தேதி முதல் அனைத்து நியாயவிலை கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

Also Read  தொடர் கனமழை : தமிழகத்தில் இன்று இந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

21 பொருட்கள் என்னென்ன?

பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லிதூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கோதுமை மாவு, ரவை, உப்பு மற்றும் கரும்பு.

Also Read  20 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று சட்டசபையில் வெள்ளை அறிக்கை தாக்கல்.!

இந்த பொங்கல் பரிசு தொகுப்பு 2,15,48,060 குடும்பங்களுக்கு மொத்தம் 1,088 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட உள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்த பொங்கல் பரிசு தொகுப்பினை இடைவிடாமல் தொடர்ந்து விநியோகம் செய்திட ஏதுவாக நியாயவிலை கடைகளுக்கு விடுமுறை தினம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி நியாயவிலை கடைகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படுவது வழக்கம். ஆனால்,ஜனவரி 7 ஆம் தேதி அன்று அனைத்து நியாயவிலை கடைகள் செயல்படும் என உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

Also Read  ஒரு மழைக்கே தாங்காத ஸ்மார்ட் சிட்டி தடுப்புச் சுவர்; கோவையின் அவலம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கட்சி மாறி வந்த 5 பேருக்கு திமுகவில் சீட்…!

Devaraj

யாரை கலாய்த்தார் நடிகை கஸ்தூரி?

Tamil Mint

சென்னை மெட்ரோ ரயில் சேவை – புதிய அறிவிப்பு!

Lekha Shree

ஆன்லைன் கேம் ‘Free Fire’க்கு தடை விதிக்கப்படுமா?

Lekha Shree

யார் இந்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ்? பண மோசடி வழக்கில் கைதானவர்களின் பின்னணி என்ன?

Lekha Shree

தமிழகத்தில் விரைவில் ஏர் ஆம்புலன்ஸ் அறிமுகம்..!

Lekha Shree

கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு

Devaraj

கொரோனா மருத்துவமனையில் சூப்பர் நூலகம்

Tamil Mint

10 எண்றத்துக்குள்ள.. ஈபிஎஸ் கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்…

Tamil Mint

கோடநாடு வழக்கு: செல்வ பெருந்தகையை வம்பிழுத்த ஜெயக்குமார்! பதிலடி கொடுத்த தங்கம் தென்னரசு!

Lekha Shree

பிச்சை எடுப்பது போல் நடித்து கொள்ளையடித்த நபர் கைது…!

Lekha Shree

பாரதிராஜாவுக்கு மீரா மிதுன் பதிலடி

Tamil Mint