ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகை… யார் தெரியுமா?


2002ம் ஆண்டு வெளியான ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பின்னர் வில்லன், வின்னர், அன்பே சிவம், திருமலை என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.

இவர் தமிழ் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு முதல் திரைப்படங்களில் அதிகம் நடிக்காத இவர் சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் சந்தானத்துடன் நடித்துள்ளார்.

Also Read  முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி நடிகை சாந்தினி மீது பரபரப்பு புகார்…!

இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கிரண், தினந்தோறும் தனது புகைப்படங்கள், வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்த பாபா படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவற விட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Also Read  பகத் பாசிலின் இருள் படத்தின் ட்ரைலர் வெளியீடு - இணையத்தில் வைரல்..!

அதில், “பாபா படத்தின் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த படத்தில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை நான் தவறவிட்டது கூட காரணமாக இருக்கலாம்.

அப்போது நான் ‘ஜெமினி’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்ததால் என்னால் இப்படத்தில் நடிக்க முடியவில்லை. நடிப்பிலும் நடனத்திலும் ரஜினியை யாராலும் தொட முடியாது என்று இப்போதும் நான் சொல்வேன்” என கூறியுள்ளார்.

Also Read  ஆக்சன் காட்சி போது செம்ம அடி : உடைந்த மூக்குடன் மன்னிப்பு கேட்ட சாரா அலிகான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கமலுக்கு வில்லனாகும் பகத் ஃபாசில்! விக்ரம் படத்தின் அப்டேட் இதோ!

Jaya Thilagan

‘மாயவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் சந்தீப் கிஷன்! வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

Lekha Shree

சூர்யா 40-ல் இணைந்த ‘அண்ணாத்த’ நட்சத்திரம்! யார் தெரியுமா?

Tamil Mint

தடுப்பூசி போட்டுக்கொண்ட ‘இசைப்புயல்’… வைரலாகும் செல்பி இதோ..!

Lekha Shree

வெற்றிமாறன்-ராகவா லாரன்ஸ் இணையும் படத்தின் டைட்டில் இதுதான்!

Lekha Shree

அறந்தாங்கி நிஷாவின் அழகிய குழந்தை.. கியூட் வீடியோ இணையத்தில் வைரல்..!

HariHara Suthan

தெலுங்கில் உருவாகும் ராட்சசன் 2ம் பாகத்தின் நாயகனாக விஜய் சேதுபதி?

Lekha Shree

தேசிய விருது பெற்ற இயக்குனருடன் இணையும் ஜி.வி. பிரகாஷ்…!

Lekha Shree

கர்ணன் படத்தின் முதல் வார வசூல் எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா செம கலெக்‌ஷன்…

HariHara Suthan

இந்த இளம் ஹீரோவை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்? வெளியான மாஸ் அப்டேட்..!

Lekha Shree

பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறாரா ஷாலினி?

Tamil Mint

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த லெஜன்ட் சரவணன்…… காரணம் இது தானா????

VIGNESH PERUMAL