பிரபல நடன இயக்குனர் சிவசங்கரின் உடல்நிலை கவலைக்கிடம்..!


பிரபல நடன இயக்குனரும் நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக ஹைதராபாதில் உள்ள AIG மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிவசங்கர் மாஸ்டர், அவரது மனைவி மற்றும் மூத்த மகன் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்ட்டுள்ளனர்.

Also Read  மீண்டும் இணையும் 'சூரரைப் போற்று' வெற்றி கூட்டணி?

இவர்களில் சிவசங்கர் மாஸ்டர் கொரோனா பாதிப்பால் ஆபத்தான நிலையில் இருந்து வருகிறார். அவருக்கு அதிக செலவு கொண்ட சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளதாக தெரிகிறது.

இந்த சிகிச்சைக்கான கட்டணத்தை அவரது குடும்பத்தினரால் செலுத்த முடியவில்லை அதனால், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள தனது அப்பாவுக்கு உதவும்படி சிவசங்கர் மாஸ்டர் மகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Also Read  'ஹார்ட்டுக்குள்ள சத்தம் இல்ல" - வைரலாகும் 'குக் வித் கோமாளி' சிவாங்கியின் பாடல்!

அதோடு திரைத்துறையினர் அவருக்கு உதவுவார்கள் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மண்வாசனை, திருடா திருடி, மகதீரா, பாகுபலி 1 உள்ளிட்ட பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் சிவசங்கர் மாஸ்டர்.

இவர் மகதீரா படத்தில் வரும் தீர தீர பாடலுக்கு நடனம் அமைத்ததற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. அதோடு இவர் வரலாறு, சர்க்கார், கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.

Also Read  ராவணனாக மாறிய சீமான்! இணையத்தை கலக்கும் புகைப்படம் இதோ!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜய்- அஜித் ஓவியங்களை வரைந்து அசத்திய பொன்வண்ணன்! வைரல் புகைப்படங்கள் இதோ!

Lekha Shree

ஆர்யன் கான் வழக்கு விசாரணை அதிகாரி நீக்கம்? போதைப்பொருள் வழக்கில் திடீர் திருப்பம்..!

Lekha Shree

ஆர்யன் கான் விவகாரத்தில் பாஜக சூழ்ச்சி? வீடியோ வெளியிட்ட அமைச்சர்..!

Lekha Shree

வெப் தொடரில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் ரெஜினா…!

Lekha Shree

’அவரு புடிச்சிட்டாரு’.. பீஸ்ட் படத்தில் இணையும் சிவகார்த்திகேயன்..!

suma lekha

“சூர்யாவை மிரட்டினால் அவ்வளவு தான்” – பாஜகவை எச்சரித்த சீமான்!

Lekha Shree

ரசிகர்களுக்காக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர் வெளியிட்ட உருக்கமான பதிவு…!

Lekha Shree

பிரபல நடிகையான பாஜக எம்.பிக்கு ரத்த புற்றுநோய்…!

Devaraj

“இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே..!” – வடிவேலுவுக்கு ஜோடியாகும் ப்ரியா பவானி சங்கர்?

Lekha Shree

“திரைப்பட விமர்சனங்களை தவிர்க்கவும்!’ – தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

Lekha Shree

அடுத்த லவ் ஸ்டோரி: விக்னேஷ் சிவனுடன் இணையும் துருவ் விக்ரம்.!

suma lekha

வெளியானது ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் வேற லெவல் அப்டேட்…! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Lekha Shree