பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் காலமானார்..!


கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் இருந்த பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரபல நடன இயக்குனரும் நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக ஹைதராபாதில் உள்ள AIG மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிவசங்கர் மாஸ்டர், அவரது மனைவி மற்றும் மூத்த மகன் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இவர்களில் சிவசங்கர் மாஸ்டர் கொரோனா பாதிப்பால் ஆபத்தான நிலையில் இருந்தார். அவருக்கு அதிக செலவு கொண்ட சிகிச்சை அளிக்க வேண்டி இருந்தது.

Also Read  சேலையில் கவர்ச்சி காட்டும் பிக்பாஸ் பிரபலம்…! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

இந்த சிகிச்சைக்கான கட்டணத்தை அவரது குடும்பத்தினரால் செலுத்த முடியாத காரணத்தால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள தனது அப்பாவுக்கு உதவும்படி சிவசங்கர் மாஸ்டர் மகன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதோடு திரைத்துறையினர் அவருக்கு உதவுவார்கள் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

Also Read  உதவிகள் கேட்டு நடிகர் சோனு சூட்டிற்கு குவியும் குறுஞ்செய்திகள்…!

இந்நிலையில், கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் இருந்த பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மண்வாசனை, திருடா திருடி, மகதீரா, பாகுபலி 1 உள்ளிட்ட பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் சிவசங்கர் மாஸ்டர்.

இவர் மகதீரா படத்தில் வரும் தீர தீர பாடலுக்கு நடனம் அமைத்ததற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. அதோடு இவர் வரலாறு, சர்க்கார், கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.

அவரது சிகிச்சைக்கு தன்னால் முடிந்த நிதியுதவியை நிச்சயம் செய்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் நடிகர் சோனு சூட், இன்று அவரது மறைவிற்கு தனது இரங்கலை தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

Also Read  இதிலும் வடிவேலுவா? Enjoy Enjami பாடலின் வடிவேலு வெர்ஷன் இதோ!

நடன இயக்குனர் சிவசங்கரின் மறைவிற்கு திரையுலகினர் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

Vaccine எங்கடா டேய்? – ட்விட்டரில் கொதித்த சித்தார்த்!

Devaraj

PSBB பள்ளி விவகாரத்தின் எதிரொலி – தனது பள்ளிப்பருவ அனுபவங்களை பகிர்ந்த ’96’ பட நடிகை!

Lekha Shree

ரஜினியின் அமெரிக்க பயணம் குறித்து நடிகை கஸ்தூரி கேள்வி – விளக்கமளித்த ரஜினி தரப்பினர்!

Lekha Shree

பிரபல நடிகையான பாஜக எம்.பிக்கு ரத்த புற்றுநோய்…!

Devaraj

வெள்ளித்திரையில் கால்பதிக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை…! இந்த ஹீரோ படத்திலா?

Lekha Shree

அது மட்டும் பண்ண மாட்டேன்: சாரி சொல்லும் சாய் பல்லவி

Tamil Mint

“திருமண நிர்பந்தத்தால் மன அழுத்தம் ஏற்படுகிறது” – நடிகை சமீரா ரெட்டி

Lekha Shree

திரையரங்குகள் திறப்பதற்கான விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது

Tamil Mint

பிக்பாஸ் வனிதா-ரம்யா கிருஷ்ணன் இடையே வெடித்த மோதல்… வெளியான பரபரப்பு ப்ரோமோ..!

Lekha Shree

போட்டியாளர்களுக்குள் முற்றிக்கொண்ட மோதல்..! ரணகளமான ‘பிக்பாஸ்’ வீடு..!

Lekha Shree

நாளை வெளியாகிறது ‘நவரசா’ டீசர்…! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Lekha Shree

“அவளால் தான் நான் இந்த வீட்டிற்கு வந்தேன்!” – யாஷிகா குறித்து பேசிய ‘பிக்பாஸ்’ நிரூப்..!

Lekha Shree