‘ஜெய் பீம்’: பிரகாஷ் ராஜ் கன்னத்தில் அறையும் காட்சிக்கு வலுக்கும் எதிர்ப்புகள்..!


உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அப்படத்தில் இடம் பெற்றுள்ள இந்தி மொழி தொடர்பான காட்சி ஒன்று தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் அது பேசுபொருளாகவும் மாறியுள்ளது.

ஜெய்பீம் திரைப்படத்தில் வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த பிறகு வழக்கை எடுத்து விசாரிக்கும் காவல்துறை அதிகாரியாக ஐஜி பெருமாள்சாமி கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடித்திருப்பார்.

இப்படத்தில் விசாரணையின் போது உண்மை குற்றவாளிகளை காட்டிக் கொடுக்க மறுக்கும் இடத்தில் அதை சமாளிப்பதற்காக திருடப்பட்ட நகைகளை வாங்கி விற்ற வட இந்தியாவை சேர்ந்த நபர் இந்தியில் பதில் சொல்வார்.

அதற்கு பிரகாஷ்ராஜ் கதாபாத்திரம் அவரை கன்னத்தில் அறைந்து தமிழில் பேசு என்று சொல்வது போன்று காட்சி அமைந்திருக்கும்.

இந்த காட்சிக்குத்தான் தற்போது சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திரைப்பட விமர்சகர் ரோஹித் இதுகுறித்து பதிவிடுகையில், “ஜெய் பீம் திரைப்படம் உண்மையில் மனதை கனக்கச் செய்தது. ஆனால், இங்கு நான் ஒரு கருத்தை பதிவிட விரும்புகிறேன்.

இது தனிப்பட்ட முறையில் எந்த ஒரு நடிகரையோ அல்லது வேறு யாரையும் குறிப்பிட்டு அல்ல. படத்தில் ஒரு காட்சி உள்ளது. அதில் ஒரு நபர் இந்தியில் பேசும்போது பிரகாஷ்ராஜ் அவரை அறைந்து தமிழ் பேச சொல்வார்.

Also Read  'டிக்கிலோனா' ப்ரீமியர் ஷோ: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…!

உண்மையில் இதுபோன்ற காட்சி தேவை இல்லாதது. படக்குழு இதை கருத்தில் கொண்டு நீக்குவார்கள் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ் படங்களை தாங்கள் ஆதரிப்பதாகவும் தமிழ் படங்களுக்காக காத்திருப்பதாகவும் தமிழ் படங்களை பல மொழிகளில் வெளியிடுவதற்கு வரவேற்பு கொடுப்பதாகவும் அதற்கு பதிலாக தாங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் அன்பு மட்டும்தான் எனவும் அன்பு இல்லை என்றால்கூட குறைந்தபட்சம் மனிதநேயத்தை எதிர்பார்க்கிறோம் எனவும் கூறியுள்ளார்.

Also Read  "ஜெய் பீம் ஆதிக்கத்திற்கெதிரான போர்க்கருவி!" - சீமான் புகழாரம்..!

இந்த ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக பத்திரிக்கையாளர் ராஜசேகர், “இந்த குறிப்பிட்ட காட்சி இந்தி பேசும் இந்தியர்களுக்கு எதிரானதாக சித்தரிக்கப்படவில்லை. குறிப்பிட்ட அந்த வட இந்தியர் கதாபாத்திரம் பிரச்சினையில் இருந்து தப்பிப்பதற்காக இந்தியில் பேசுகிறார்.

இந்த திட்டத்தை புரிந்துகொண்டு பிரகாஷ் கதாபாத்திரம் அவரை அறைந்து தமிழ் பேச சொல்வார் . தமிழ் இயக்குனர்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல. நாம் அனைவரும் பெருமைமிகு இந்தியர்கள்” என கூறியுள்ளார்.

Also Read  தவறான பேஷியல் - ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்ட நடிகை ரைசா!

இதையடுத்து அதற்கு பதில் கூறியுள்ள ரோகித், “யாரும் குறிப்பிட்ட ஒரு மொழிக்கு எதிரானவர்கள் என இங்கு நான் குறிப்பிடவில்லை. அந்த காட்சி எனக்கு மிகவும் வேதனையை ஏற்படுத்தியது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புரிதல் இருக்கும்.

உண்மையில் அந்த காட்சி தேவையில்லாதது. நான் ஒரு திரைப்பட விமர்சகராக பல வருடங்களாக தமிழ் படங்களுக்கு ஆதரவு அளித்து வருகிறேன். அந்த காட்சியில் அறைவதற்கு பதில் தமிழில் பேசு என சொல்லி இருந்தாலே போதுமானது” என பதிவிட்டுள்ளார்.

மேலும், ஜெய்பீம் படத்தின் இந்த காட்சிக்கு வந்திருக்கும் எதிர்ப்புக்கு பலர், Scam 1992 என்ற இணைய தொடரில் தமிழ் பேசும் ஒருவரை பார்த்து “இந்தி தெரியாது?” என அதிகாரி ஒருவர் கேட்கும் காட்சி பதிலடி தான் இந்த காட்சி என சமூக வலைதளத்தில் குறிப்பிட்டு வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தெறிக்கவிடும் என்ஜாய் எஞ்சாமி பாடல்! – 10 கோடி பார்வைகளை கடந்து அசத்தல்!

Shanmugapriya

‘பிளாக் அண்ட் வைட்’ உடையில் கலக்கும் ‘கனா’ நாயகி… வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

“நாகசைதன்யாவின் அமைதி கவலையளிக்கிறது!” – சமந்தாவின் டிசைனர் வருத்தம்..!

Lekha Shree

அஜித் பட ரீமேக்கில் நடிக்கும் சிரஞ்சீவி? என்ன படம் தெரியுமா?

Lekha Shree

“வாய் தவறி பட்டியலின சமூகத்தினர் பற்றி அவதூறாக பேசிவிட்டேன்” – நடிகை மீராமிதுன்

Lekha Shree

‘அஞ்சான்’ பட நடிகர் கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree

கமலின் ‘இந்தியன்’ பட நடிகைக்கு கொரோனா பாதிப்பு…!

Lekha Shree

வைரலாகும் ’தெறி பேபி’ நைனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்..!

suma lekha

கங்கனாவின் திமிர் பேச்சுக்கு சுளீர் பதிலடி கொடுத்த பிரபல நடிகை… வைரலாகும் ட்வீட்…!

Tamil Mint

கிராமி விருது பரிந்துரையில் ஏர். ஆர்.ரஹ்மான்!

suma lekha

ரசிகர்களோடு ரசிகர்களாக அமர்ந்து படம் பார்த்த மாஸ்டர் பட குழுவினர்… முழுவிவரம் இதோ.!

Tamil Mint

மணிரத்தினத்தின் அடுத்த அந்தலாஜி திரைப்படம் நெட்பிளிக்ஸ்யில் வெளியாகப்போகின்றது

Tamil Mint