a

பிரசாந்த் கிஷோர் மிரட்டப்பட்டாரா…! ஐபேக்கில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பு ஏன்…?


நவீன தொழில்நுட்ப வசதிகளின் உதவியுடன் தேர்தல் உத்திகளை வகுப்பதில் கைதேர்ந்தவர் பிரசாந்த் கிஷோர். இவர், பீகாரில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பஞ்சாப்பில் காங்கிரஸ், தமிழகத்தில் திமுக, மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளின் தேர்தல் உத்திகளுக்கு மூளையாக செயல்பட்டவர்.

பிரசாந்த் கிஷோருக்கு சொந்தமான ஐபேக் கார்ப்பரேட் நிறுவனம், ஆயிரக்கணக்கானோரை தற்காலிக ஊழியர்களையும் நூற்றுக்கணக்கான மாத ஊழியர்களையும் பணியில் அமர்த்தி தேர்தல் பரப்புரை உத்திகளை வகுத்து கொடுத்து வந்தது. சமூக ஊடக பிரசாரங்கள், தேர்தல் விளம்பர உத்திகள் போன்றவற்றை வடிவமைத்து வெகுஜனத்திடம் அவற்றை கொண்டு சேர்க்க ஐபேக் குழு இரவு, பகலாக உழைத்தது.

அந்த வகையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ், தமிழகத்தில் திமுக வெற்றிக்கு முக்கிய காரணியாக ஐபேக் நிறுவனம் இருந்தது என்றால் மிகையல்ல. இதற்காக இந்த இரு மாநிலங்களுக்கு இடையேயும் வாரம் ஒரு முறை அல்லது இரு முறை பறந்து, பறந்து தனது பணிகளை பிரசாந்த் கிஷோர் மேற்கொண்டு வந்தார்.

தமிழகத்தை பொறுத்தவரை மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் என திமுக மேலிட தலைவர்களுடன் நேரடி தொடர்பில் பிரசாந்த் இருந்து வந்தார். மூத்த தலைவர்களின் அதிருப்தி, கட்சிக்குள் கார்ப்பரேட் கம்பெனி தலையீடு தேவையா என்பது போன்ற பல்வேறு விமர்சனங்களை தாண்டி, தனது தேர்தல் யுக்திகளை செயல்படுத்த வைத்தார். ஆனாலும் 200+ தொகுதிகளில் வெற்றி என்ற அவரின் கணிப்பு தவிடு பொடியாகி உள்ளது என்றே சொல்லலாம்.

Also Read  "மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும்" - கைவிரல்களை துண்டித்துக் கொண்ட தொண்டர்!

இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கும் அதே சமயம் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தேர்தல் உத்திகள் தொடர்பான பணிகளில் இருந்து விலகுவதாக பிரசாந்த் அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இப்போது தான் செய்து வரும் பணியை தொடர விரும்பவில்லை என்றும் போதுமான அளவுக்கு உழைத்து விட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ள பிரசாந்த் கிஷோர், தனக்கு ஒரு பிரேக் தேவைப்படுகிறது என்றுள்ளார். வேறெதையாவது வாழ்வில் செய்ய ஆசைப்படுகிறேன் என்றும் இந்த இடத்தில் இருந்து விலக விரும்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது, யாருடைய மிரட்டலின் காரணமாகவோ எடுத்த முடிவாக சந்தேகத்தை எழுப்பி உள்ளது.

Also Read  "கொரோனாவை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்" - உயிரிழந்த கர்ப்பிணி டாக்டரின் நெஞ்சை உருக்கும் பதிவு!

தேர்தல் ஆலோசனை கூறும் பணியில் இருந்து தாம் விலகினாலும் தமது ஐபேக் நிறுவனம் தொடர்ந்து இயங்கும் என்று குறிப்பிட்டுள்ள பிரசாந்த் கிஷோர், ஐபேக் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள், தொழில்நுட்ப நிபுணர்கள் அனைவரும் தங்களுடைய சேவைகளை தொடர்ந்து வழங்குவார்கள் என்று கூறினார்.

தமது பணியை திருப்திகரமாக செய்து முடித்ததாகக் கூறிய அவர், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஒருபக்க சார்பாக இருந்ததாக குற்றம்சாட்டினார். மேற்கு வங்க மாநிலத்தில் மத ரீதியாக வாக்காளர்கள் இடையே தாக்கத்தை ஏற்படுத்த பல வழிகளை பாஜக கையாண்டது என்றும் ஆனால், அதை தேர்தல் ஆணையம் தடுக்கும் என்ற நம்பிக்கையை பொய்யாகி மெளனப் பார்வையாளராக இருந்தது என்றும் அவர் கூறினார்.

Also Read  நெருங்கும் தமிழக தேர்தல்; குறைகிறதா விறுவிறுப்பு?

சட்டமன்றத் தேர்தல்களில் முக்கிய கட்சிகளின் வெற்றிக்காக தாங்கள் நரக வேதனையை அனுபவித்தோம் என்றும் பிரசாந்த் கிஷோர் குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜனவரி 4 முதல் புதுவையில் பள்ளிகள் திறப்பு

Tamil Mint

காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் எதிர்கட்சிகள் வெற்றி பெற வாய்ப்பு!

Tamil Mint

சிபிஎஸ்இ தேர்வு தேதிகள் மாற்றம்… புதிய அட்டவணை வெளியீடு!

Lekha Shree

திருப்பதி தேவஸ்தானத்தின் பலே யோசனை – துளசி விதை பையில் லட்டு பிரசாதம்!

Jaya Thilagan

பிரச்சாரம் செய்ய 24 மணி நேரத்துக்கு மம்தா பானர்ஜிக்கு தடை!

Shanmugapriya

உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலில் டெல்லிக்கு 62வது இடம்

Tamil Mint

தொகுதி பங்கீடு மல்லுக்கட்டு – தேமுதிக கேட்கும் 23 இடங்களுக்கு தலையசைக்குமா அதிமுக…!

Jaya Thilagan

“பகல் வேஷம் போடும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு கடவுள் தேர்தல் மூலம் தண்டனை கொடுப்பார்” – முதல்வர் பழனிசாமி

Tamil Mint

பிறந்து 14 நாட்களே ஆன கொரோனாவுக்கு பலியான பச்சிளம் குழந்தை…!

Devaraj

திமுகவுக்கு ஆதரவு அளிக்கும் கருணாஸ்… இணைந்து கொண்ட தமிமுன் அன்சாரி!

Lekha Shree

ஆக்சிஜய் வாயு கசிவு – மருத்துவமனையில் 22 நோயாளிகள் உயிரிழப்பு

Devaraj

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 – இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு!

Lekha Shree