“5 முறை போன் மாற்றியும் ஒட்டுக்கேட்பது ஓயவில்லை” – பிரஷாந்த் கிஷோர் ஆவேசம்!


பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், தனது செல்போனை இதுவரை 5 முறை மாற்றியும் கூட ஒட்டுகேட்கும் பிரச்சினை ஓயவில்லை என தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேரை பல்வேறு உலக நாடுகள் பயங்கரவாத தடுப்பு போன்ற நடவடிக்கைகளுக்காக வாங்கியுள்ளன.

அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. இப்போது ஏற்பட்டிருக்கும் சர்ச்சை இந்தியா அந்த உளவு மென்பொருளை கொண்டு 40 பத்திரிகையாளர்கள் உட்பட 300 பேரை உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதில் பல அரசியல் பிரமுகர்களும் அடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதில் முக்கியமாக தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் போன் ஒட்டு கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Also Read  தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்…!

கடந்த 2014ல் பிரதமர் மோடிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்து குஜராத் மாடல் வளர்ச்சி என்று அனைவரும் விவாதிக்கவும் வழிவகுத்தவர் பிரசாந்த் கிஷோர்.

அதன் பின்னர் சில கருத்து வேறுபாடால் பாஜக உடனான தொடர்பை முறித்துக் கொண்டு சமீபகாலமாக பாஜக எதிர்ப்பு கொள்கைகள் கொண்ட பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்து வெற்றி பெறச் செய்துள்ளார் பிரஷாந்த் கிஷோர்.

Also Read  தமிழக தேர்தல் முடிவுகள் 2021: திருவல்லிக்கேணியில் உதயநிதி முன்னிலை..!

இவரது தொலைபேசியை கடந்த ஜூன் மாதத்தில் 14 நாட்களும், ஜூலை மாதத்தில் 12 நாட்களும் ஒட்டுகேட்கப்பட்டுள்ளது.

மேலும், ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தியை பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசிய 13ம் தேதியும் அவரின் போன் ஒட்டுகேட்கப்பட்டுள்ளது.

Also Read  எடப்பாடி பழனிசாமியின் சொத்து மதிப்பு ஒரு கோடி குறைந்தது! - ஓபிஎஸின் சொத்து மதிப்பு 509% அதிகரிப்பு! - முழு விவரம்!

இதுகுறித்து கூறுகையில் பிரசாந்த் கிஷோர், “2017 முதல் 2021 வரையில் என் மொபைல் போன் ஒட்டுகேட்கப்படுவதை நான் உணரவில்லை. இந்த காலகட்டத்தில் ஐந்து முறை போனை மாற்றிவிட்டாலும் ஒட்டுக்கேட்கும் பிரச்சனை ஓயவில்லை” என கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மே 20-ல் மீண்டும் கேரள முதல்வராக பதவியேற்கிறார் பினராயி விஜயன்….

Ramya Tamil

டெல்லி வன்முறை: “300க்கு மேற்பட்ட காவலர்கள் காயம்” – டெல்லி போலீஸ் தந்த அதிர்ச்சி தகவல்!

Tamil Mint

திமுகவுடன் இணையுமா தேமுதிக?

Tamil Mint

இரு மடங்கு வேகத்தில் உருகும் இமயமலை பனிப்பாறைகள் – எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்!

Tamil Mint

ஆ.ராசா, தயாநிதி மாறன், லியோனி மீது வழக்குப்பதிவு..!

Lekha Shree

‘ரத்த நிலவு’ – இன்று நிகழும் வானியல் அதிசயம்…!

Lekha Shree

இந்திய சந்தையில் அறிமுகம் ஆகும் ஒப்போவின் 6 புதிய 5ஜி ஸ்மார்ட்போன்கள்!

Tamil Mint

டெல்லியில் மேலும் ஒருவாரத்துக்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு

sathya suganthi

பிளாட்டுக்கு வரச் சொன்னார் கேரள சபாநாயகர்… மீண்டும் பரபரப்பை கிளப்பும் ஸ்வப்னா சுரேஷ்…!

Devaraj

அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் சசிகலா நுழைந்தால் சட்டப்படி நடவடிக்கை – அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

Tamil Mint

கொரோனா உச்சத்தை இந்தியா கடந்துவிட்டது: நிபுணர் குழு

Tamil Mint

அடுத்தடுத்து பதவி விலகும் மத்திய அமைச்சர்கள்! – ஹர்ஷ்வர்தனும் ராஜினாமா!

Lekha Shree