a

கொரோனா தொற்றால் மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி…! சீமந்தத்தால் நேர்ந்த விபரீதம்…!


தமிழகத்தில் கொரோனா 2வது அலை அதி வேகமாக பரவி வரும் நிலையில், தங்கள் உயிரை துச்சமென கருதி மருத்துவர்கள், காவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள் இரவும் பகலும் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.

இதனால் ஒரு சில முன்களப்பணியாளர்களும் அவர்கள் குடும்பத்தினரும் கொரோனா தொற்று உள்ளாகி வருகின்றனர். அவர்களில் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கும் சோகமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

Also Read  பிரபல தாதா சோட்டா ராஜன் மறைவு குறித்த செய்தியை மறுத்த எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம்…!

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 மாத கர்ப்பிணி கார்த்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த கார்த்திகா, முதுநிலை பயற்சி மருத்துவர். இவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சீமந்தம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

Also Read  கொரோனாவை பரப்பியது சீனாதான் - அதிரவைக்கும் ஆதாரத்தை வெளியிட்ட அமெரிக்கா…!

அப்போது வந்த உறவினர்களால் குடும்பத்தினர் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து கர்ப்பிணியான மருத்துவர் கார்த்திகாவிற்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

திருவாண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடு சிகிச்சை பெற்றவர், தொற்றின் தீவிரத்தால் கடந்த வாரம் சென்னை அப்பல்லோ மருத்துவனைக்கு கொண்டு வரப்பட்டார்.

Also Read  ரேஷன் கடைகளில் இலவச முகக் கவசங்கள் வழங்கும் திட்டம் - முதல்வர் தொடங்கி வைத்தார்

ஆனால் ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் அவதிப்பட்டதால், வானகரம் அப்போல்லோ மருத்துவனையில் இருந்து கடந்த 19-ம் தேதி கிரீம்ஸ் ரோடு அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி கார்த்திகா உயிரிழந்தார். சில தினங்களுக்கு முன்பு மதுரையில் ஆரம்ப சுகாதார நிலை மருத்துவரான 30 வயதான சண்முகப்ரியா உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்றைய தலைப்புச் செய்திகள் | 23.5.2021

sathya suganthi

நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை

Tamil Mint

மோடியை பிரச்சாரத்திற்கு அழைக்கும் திமுக வேட்பாளர்கள்…!எதற்கு தெரியுமா…?

Devaraj

சென்னை விமான நிலைய சரக்கு பிரிவு பகுதியில் 500க்கும் மேற்பட்ட தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்ந்து பணிகளை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Tamil Mint

டெல்லி முதல்வர் பயணம் குறித்து வெளியான முக்கிய தகவல்!

Tamil Mint

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

Lekha Shree

தைரியம் இல்லாத எடப்பாடி… கொத்தடிமை அமைச்சர்கள்: விளாசிய ஸ்டாலின்

Tamil Mint

“தோல்வியை சந்தித்தாலும் நாம் தமிழர் கட்சி வளர்ச்சியை கண்டிருக்கிறது” – இயக்குனர் சேரன்

Lekha Shree

ரயில்வே டிக்கெட் புக்கிங் இன்று தொடங்கவில்லை

Tamil Mint

பிரபல நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் மரணம்.. சோகத்தில் தமிழ் திரையுலகம்..

Ramya Tamil

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

பள்ளிகளை திறக்க முடியாததால் தமிழக அரசின் புது ஐடியா

Tamil Mint