a

நிறைமாத கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி – ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி கோர விபத்து…!


கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயலெட்சுமி என 23 வயதே ஆன நிறைமாத கர்ப்பிணிக்கு, இன்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயலெட்சுமி, அவரது மாமியார் மற்றும் நாத்தனார் என மூவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டனர்.

Also Read  350 கி.மீ செல்வதற்கு ரூ.1.2 லட்சம் கட்டணம் வசூலித்த ஆம்புலன்ஸ் நிறுவனம்!

ஆம்புலன்சை ஓட்டிவந்த டிரைவர் கலியமூர்த்தி மற்றும் மருத்துவ உதவியாளர் மீனா ஆகியோரும் ஆம்புலன்சில் பயணம் செய்து வந்துள்ளனர்.

இதற்கிடையே, கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஆலத்தூர் ஏரிக்கரை அருகே வந்த போது ஆம்புலன்ஸ் டயர் வெடித்ததில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தின் மீது அதிவேகமாக மோதியது.

Also Read  எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு எப்படி நடக்கும்…! சுவாரஸ்யமான தகவல்கள்…!

இதில் நிறைமாத கர்ப்பிணியான ஜெயலெட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், படுகாயமடைந்த எஞ்சிய 4 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதில் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே ஜெயலெட்சுமியின் மாமியார் செல்வி மற்றும் நாத்தனார் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read  தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மே.18 முதல் தனியார் மருத்துவமனைகள் மூலமாகவே ரெம்டெசிவிர் விநியோகம்

sathya suganthi

தமிழக அரசு திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்திருப்பது விதிமீறல்: மத்திய உள்துறை அமைச்சகம்

Tamil Mint

20% இடஒதுக்கீடு போராட்டம்: முதல்வரை சந்தித்தார் அன்புமணி ராமதாஸ்

Tamil Mint

”போக்சோ சட்டத்தில் திருத்தங்கள் வேண்டும்” – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து!

Tamil Mint

தமிழகத்தில் ஏழு ஏஎஸ்பிக்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது:

Tamil Mint

அதிமுக 49-வது ஆண்டு தொடக்க விழா: முதல்வர் கொடியேற்றினார்

Tamil Mint

உண்மையை மறைக்க சொல்கிறது மத்திய அரசு – மா.சுப்பிரமணியன்

sathya suganthi

கட்சிக்காக துணை முதல்வர் பதவியிலிருந்து விலகத் தயார்..? ஓ.பன்னீர்செல்வத்தின் அதிரடி ட்விஸ்ட்..!

Tamil Mint

சென்னையில் ஒரே நிறுவனத்தில் 40 பேருக்கு கொரோனா…!

Devaraj

தமிழ்நாட்டில் முதல் தனியார் ரயில் :

Tamil Mint

‘மாஞ்சா நூல் விற்பனை – 45 பேர் கைது

Tamil Mint

“காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் நான் பேசியதை திரித்துக் கூற வேண்டாம்” – கார்த்திக் சிதம்பரம் எம்.பி

Lekha Shree