கிருஷ்ணர் கை உடைந்ததாகக் கூறி மருத்துவமனைக்கு வந்த பூசாரி!!! சிகிச்சை அளித்து அனுப்பி மருத்துவர்கள்….


உத்திரபிரதேசத்தில் பூசாரி ஒருவர் கிருஷ்ணர் பொம்மையின் கை உடைந்ததாகக் கூறி மருத்துவமனைக்கு வந்த வீடியோ வைரலாகி வருகிறது.

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஒரு கோவில் பூசாரி ஒருவர் கையில் ஒரு பெரிய துணியில் எதையோ சுருட்டிக்கொண்டு கதறிக்கொண்டே மருத்துவமனைக்கு வந்தார். அதைப் பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் பதறிப்போய் விசாரித்த போது அவர் சொன்ன விஷயம் எல்லோரையும் திகைக்க வைத்தது.

அவர் தன் வீட்டில் உள்ள கிருஷ்ணர் சிலைக்கு அபிஷேகம் செய்து கொண்டிருந்ததாகவும், அப்பொழுது எதிர்பாராத விதமாகக் குழந்தை கிருஷ்ணரின் கை உடைந்து விழுந்துவிட்டதாகவும் அதனால் உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவரைக் காண வந்ததாகவும் கூறினார்.

Also Read  பிணவறை ப்ரீசரில் வைக்கப்பட்ட உடல்!!!7 மணி நேரத்திற்கு பிறகு உயிர் இருந்தது கண்டுபிடிப்பு….

உடைந்த கைக்குக் கட்டுப் போட்டு மீண்டும் ஓட்ட வைக்க இவர் மருத்துவரைக் காண வந்துள்ளார். இவரைக் கதறலைப் பார்த்த மருத்துவர்கள் இவருக்கு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காததால் வேறு வழியில்லாமல் இவரை சமாதானப்படுத்த “ஸ்ரீ கிருஷ்ணர்” எனப் பெயரில் நோயாளியைப் பதிவு செய்து மருத்துவர்கள் உடைந்த கையை ஒட்ட வைத்து அனுப்பினர். அவர் கதறிக்கொண்டே தன் கிருஷ்ணருக்கு ஏற்பட்ட நிலையைச் சொல்லும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைலராக பரவி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டெல்லியில் உருகிய தார் சாலைகள்…! 76 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகபட்ச வெப்பநிலை…!

Devaraj

கொரோனா சிகிச்சைக்காக 3,816 ரயில் பெட்டிகள் தயார்

Devaraj

சர்வதேச மல்யுத்த போட்டியில் முதல் தங்கம் வென்று இந்திய வீராங்கனை சாதனை!

Lekha Shree

“புதிய ‘பிரைவசி’ பாலிசியை ஏற்க பயனர்களை கட்டாயப்படுத்த மாட்டோம்” – வாட்ஸ்அப் உறுதி!

Lekha Shree

கர்நாடகாவில் பிரபலமடையும் மொபைல் சலூன் கடை!

Shanmugapriya

கொரோனா தொற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது; 2-வது நாளாக நாளொன்றுக்கு 80 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

Tamil Mint

“மகாத்மா காந்தி எதை சொன்னாலும் செயல்படுத்தி விடுவார்” : ராகுல் காந்தி எம்.பி. புகழாரம்.!

mani maran

சல்மான் குர்ஷித் வீட்டிற்கு தீவைப்பு!!! 20 பேர் மீது வழக்குப்பதிவு..

Lekha Shree

சைக்கிளில் வந்த டெலிவரி பாய்க்கு பைக் வாங்கிக் கொடுத்த நபர்! – குவியும் பாராட்டு

Shanmugapriya

ஜிஎஸ்டி இழப்பீட்டு கடனாக மாநிலங்களுக்கு ரூபாய் 6000 கோடி வழங்கியது மத்திய அரசு

Tamil Mint

பத்ரிநாத், கேதார்நாத் யாத்திரைக்கு தடை…! பாஜக அரசுக்கு கடிவாளம் போட்ட நீதிமன்றம்…!

sathya suganthi

வீடு தேடி வரும் மது…! ஆன்லைன் விற்பனைக்கு அனுமதி…!

sathya suganthi