“பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா” – 2022 மார்ச் மாதம் வரை நீட்டிப்பு!!!


80 கோடி பேருக்கு ரேஷன் மூலம் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் 2022 மார்ச் மாதம் வரை நீடிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவலின் போது நாடு தழுவிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது மக்களின் நலன் கருதி “பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா”  திட்டத்தின் மூலம் உணவு தானியங்கள் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள 80 கோடி ஏழை மக்கள் மாதந்தோறும் 5 கிலோ கோதுமை, 5 கிலோ அரிசி, 1 கிலோ உளுத்தம்பருப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது; 

Also Read  "இணைந்தால் பங்கு இல்லையேல் சங்கு" - போஸ்டரால் பரபரப்பு!

2020 மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டம் கொரோனா தொற்று பரவல், ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக 2021 நவம்பர் 30ம் தேதி வரை நீட்டித்திருந்தது.  இந்த திட்டமானது இம்மாதத்துடன்  முடிவுக்கு வரவுள்ள நிலையில் திட்டத்தை நீட்டிப்பது குறித்து இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, இத்திட்டம் 2022ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாகவும், உணவு தானிய திட்டத்திற்கு மானியமாக 53,344.52 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார்.

முன்னதாக, இத்திட்டம் நீடிக்கப்படுவது குறித்து எந்த பரிசீலனையும் மத்திய உணவுத்துறை அமைச்சகத்திற்கு வரவில்லை என உணவுத்துறை செயலாளர் சுதன்ஷி பாண்டே தெரிவித்து இருந்தார். மேலும்,  இதற்கு பல தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பும், திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வந்தது இந்நேரத்தில் குறிப்பிடத்தக்கது.

Also Read  தமிழகம் வெற்றிநடை போட்டிருந்தால், அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன்: கோவையில் கமல்ஹாசன் பேட்டி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சிக்கூட்டம்…!

sathya suganthi

உழைத்து தியாகம் செய்து அரசியலில் முன்னுக்கு வந்தேன் – மு.க.ஸ்டாலின்

Tamil Mint

ஜெயலலிதா இடத்தை நெருங்கும் கனிமொழி…! திமுகவால் முன்னிறுத்தப்படுவாரா…!

sathya suganthi

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு எப்படி நடக்கும்…! சுவாரஸ்யமான தகவல்கள்…!

sathya suganthi

ஆர்யன் கான் விவகாரத்தில் பாஜக சூழ்ச்சி? வீடியோ வெளியிட்ட அமைச்சர்..!

Lekha Shree

மம்தா பானர்ஜிக்கு உயர்நீதிமன்றம் ரூ.5 லட்சம் அபராதம்…! காரணம் இதுதான்…!

sathya suganthi

தி.மு.க., வில் சேர எந்த அழைப்பும் வரவில்லை: மு.க. அழகிரி

Tamil Mint

மாவோயிஸ்டுகளை விட மோசமானவர்கள் பாஜகவினர்: மமதா பானர்ஜி

Tamil Mint

விமர்சனங்களை வரவேற்கிறேன் – கமல் பளிச்

Devaraj

தமிழக அரசு அறிவிக்கப்போகும் சென்னை சங்கமம் குழுவில் எம்.பி கனிமொழி ஒதுக்கப்படுகிறாரா?

Lekha Shree

“பேருந்துகளில் மகளிருக்கு இலவசம்… ஆண்களுக்கு கூடுதல் கட்டணம்” – ஓபிஎஸ் குற்றச்சாட்டு

Lekha Shree

பிப்ரவரி 21 முதல் விருப்ப மனுக்களை பெறுகிறது மக்கள் நீதி மய்யம்

Tamil Mint