கோவை மாணவி தற்கொலை விவகாரம்: பள்ளி முதல்வரை கைது செய்ய வலுக்கும் போராட்டம்..!


கோவையில் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

கோவையில் தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவியின் உடலை வாங்க மறுத்து மாணவியின் வீட்டின் முன்பாக மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர்கள், மாணவியின் உறவினர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக பேசியவர்கள், “மாணவி புகார் கொடுத்தும் பாலியல் அத்துமீறலுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மாணவியை மிரட்டி அந்த குற்றத்தை மூடிமறைத்து மாணவி தற்கொலை செய்ய முக்கிய காரணமாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்ய வேண்டும்.

அதுவரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம். போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும். கைது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றால் உக்கடம் சாலையில் மறியல் போராட்டத்தை தொடங்குவோம்” என தெரிவித்துள்ளனர்.

Also Read  நடிகை மீரா மிதுன் மீண்டும் கைது..!

மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் வலியுறுத்தியுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

செல்வராகவனுக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்: எதற்கு தெரியுமா?

Tamil Mint

ஜனவரியிலேயே சுடும் சூரியன்… மே மாதம் எப்படி?

Tamil Mint

மகேஷ்பாபு படம் பார்ப்பது போல உள்ளது…! பூரிப்பில் சேப்பாக்கம் மக்கள்…!

sathya suganthi

“இந்த மாதம் எங்களுக்கு 2 கோடி தடுப்பூசி கொடுங்க” : மத்திய அரசிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்.

mani maran

நடிகர் ரஜினிகாந்த் சீல்பெட் அனியாமல் காரில் சென்றதால் போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

Tamil Mint

“நல்லா இருக்கிற தமிழ்நாட்டை ஏன் பிரிக்கனும்?” – ‘வைகைப்புயல்’ வடிவேலு

Lekha Shree

ரகுராம் ராஜன்…! நோபல் பரிசு பெற்ற எக்ஸ்பர்ட்…!மு.க.ஸ்டாலினுக்காக சூப்பர் நிபுணர் குழு…!

sathya suganthi

‘நிவர்’ சேதங்களை கண்காணிக்க முதல்வர் இ.பி.எஸ் கடலூர் விரைந்தார்

Tamil Mint

கொரோனா தடுப்பு பணியில் உயிர் நீர்த்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்- முதலமைச்சர் அறிவிப்பு

sathya suganthi

“ஒப்பந்தக்காரரின் பணத்தில் புதிதாக கட்டடம் கட்ட வைக்க வேண்டும்”: கமல் ஆவேசம்.!

mani maran

கொரோன பரவல் – தமிழகம் 3வது இடம்!

Lekha Shree

புதிய கல்விக் கொள்கை என்பது காவிக் கொள்கை – மு.க. ஸ்டாலின்

Tamil Mint