a

தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை – PSBB கராத்தே மாஸ்டர் கைது..!


சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது அம்பலமான நிலையில், அவரை கைது செய்த போலீசார், அத்துமீறலில் ஈடுபடும் ஆசிரியர்கள் குறித்து 9444772222 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் புகார் தெரிவிக்குமாறு அறிவித்திருந்தனர்.

அந்த வகையில், அண்ணாநகரில் உள்ள பத்மா சேஷாத்திரி மில்லினியம் பள்ளியில் படித்து வரும் மாணவிகளுக்கு தற்காப்பு கலைகள் சொல்லிக்கொடுத்து வந்த கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ், மாணவிகளை பள்ளியின் தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக 2 மாணவிகள் வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளித்தனர்.

Also Read  விஜய் டி.வி.யை அப்படியே காப்பியடிக்கும் சன் டி.வி... புதிய சீரியல் பற்றி ரசிகர்கள் விமர்சனம்..!விஜய் டி.வி.யை அப்படியே காப்பியடிக்கும் சன் டி.வி... புதிய சீரியல் பற்றி ரசிகர்கள் விமர்சனம்..!

அந்த புகாரின்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கண்காணிப்பாளர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் போலீசார் கராத்தே மாஸ்டர் கெவின் ராஜை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, அதிகாலையில் கராத்தே பயிற்சிக்கு வரும் போது மாணவிகளை தனி அறைக்கு அழைத்து சென்று தொந்தரவு கொடுத்து வந்தது தெரியவந்தது.

Also Read  கோவை, காஞ்சி மாவட்ட கலெக்டர்களுக்கு வைரஸ்... மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளுக்கு பரிசோதனை நடத்தப்படுமா?

மேலும், கராத்தே பயிற்சி உடையை மாணவிகள் மாற்றும் போது அதை ஒளிந்து இருந்து பார்த்து மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கராத்தே மாஸ்டர், செல்போனை ஆய்வு செய்த போது சில மாணவிகளின் ஆபாச படங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

Also Read  விஜயகாந்த்-உதயநிதி ஸ்டாலின் திடீர் மீட்…! காரணம் இதுதானா…!

இதையடுத்து கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ் மீது அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் ஐபிசி 376 (பாலியல் வன்கொடுமை), 506(i) கொலை மிரட்டல், 354 உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திண்டுக்கல் லியோனி… ஆ.ராசா… தயாநிதி மாறன்..! இவர்கள் பேசியது என்ன?

Lekha Shree

விஷாலுக்கு ரூ.2கோடி கட்ட வருமானவரித்துறை நோட்டீஸ்…?! டிடிஎஸ் கட்டாமல் மோசடியா?! தப்பிக்க பெண் ஊழியர் மீது கையாடல் புகாரா?

Tamil Mint

மறைந்த எழுத்தாளர் கி.ராவுக்கு சிலை – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

sathya suganthi

வருமானமில்ல இன்சூரன்ஸ் கட்டமுடியல, கும்புடுறேன் ஆட்டோவுக்கு FC குடுங்கய்யா என்ற தாண்டமுத்துவின் வலி RTOக்கு புரியவே இல்லை.

Tamil Mint

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பூட்டா சிங் மறைந்தார்

Tamil Mint

‘லட்சத்தீவை காப்பாற்றுங்கள்!’ – தமிழகத்தில் இருந்து ஒலித்த ஆதரவு குரல்கள்!

Lekha Shree

நாங்கள் ஜோசியம் பார்க்கவில்லை: ஸ்டாலினுக்கு முதல்வர் பதிலடி

Tamil Mint

VPF கட்டணத் தள்ளுபடி – இயக்குனர் பாரதிராஜா அறிக்கை

Tamil Mint

இரவில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம் : அரசுக்கு இவ்வளவு கோடி ரூபாய் இழப்பா…!

Devaraj

தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது எப்போது? அமைச்சர் பதில்

Tamil Mint

தமிழகத்தில் தீவிரமாகும் கொரோனா பாதிப்பு: சென்னையில் மீண்டும் லாக்டவுன்?

Lekha Shree

அதிமுகவின் அதிரடி தேர்தல் பிளான்!!

Tamil Mint