a

PSBBயில் “கோயில் தீர்த்தம்” கொடுத்து அத்துமீறல் – அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்


தமிழகம் முழுவதும் கிளைகள் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி குழுமத்தின் கீழ் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

டிசிப்பிளினுக்கு பெயர் போன இந்த பள்ளியில், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

செல்போன் எண்ணிற்கு ஆபாச செய்தி அனுப்புவது, அறைக்குறை ஆடையுடன் ஆன்லைன் வகுப்பிற்கு வருவது என அடுக்கடுக்காய் பல புகார்கள் பதிவான நிலையில், ஆசிரியர் ராஜகோபாலன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும், வேறு யாரேனும் ஆசிரியர்களால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி இருந்தால் 9444772222 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்திருந்தனர்.

அதைதொடர்ந்து பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர்கள் மீது முன்னாள் மற்றும் தற்போது 11 மற்றும் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் என 35க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார் அளித்துள்ளதாகவும் முன்னாள் மாணவிகள் சிலர் மகளிர் போலீசாரிடம் நம்ப முடியாத பல தகவல்களை கூறியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் உள்ள பாதிக்கப்பட்ட மாணவி மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து புகார் அளித்த முன்னாள் மாணவிகளும் அடுக்கடுக்காய் பல்வேறு குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர்.

Also Read  தமிழக அமைச்சர் துரைக்கண்ணு சற்று முன் காலமானார் - காவேரி மருத்துவமனை

அதன் முழு விவரம் இதோ…!

பத்மா சேஷாத்திரி பள்ளியில் அதிகளவில் பாலியல் தொந்தரவுக்கு ஆளான மாணவிகளில் பலர் அரசு ஒதுக்கீட்டின் மூலம் பள்ளியில் சேர்ந்தவர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் பிள்ளைகள் தான் என்றும் சரியாக படிக்காத சில மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் தனி வகுப்பு நடத்துவதாக விடுமுறை நாட்களில் பள்ளிக்கு அழைத்து செல்வார் என்றும் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

அப்போது, ஆசிரியர் ராஜகோபாலன், கோயிலுக்கு சென்று இருந்தேன், அப்போது அங்கு கொடுத்த தீர்த்தம் என்று தண்ணீர் போன்று ஒன்று கொடுப்பார் என்றும் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

அதை குடித்த உடன் சிறிது நேரம் தங்களுக்கு மயக்கமாக இருக்கும் என்றும் மயக்கம் குறித்து ஆசிரியரிடம் சொன்னால் ‘நீ காலையில் சாப்பிடாமல் வந்து இருக்கிறாய். அதனால் தான் மயக்கமாக இருக்கும். சிறிது நேரம் ஓய்வு அறையில் தூங்கிவிட்டு வகுப்பு அறைக்கு வா’ என்று கூறிவிட்டு செல்வார் என்றும் மாணவிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Also Read  காவல்துறையில் உலா வரும் பல ‘ராஜேஷ் தாஸ்’கள்! தொடரும் அவலம்!

அதன் பிறகு தங்களுக்கு ஒரு மணி நேரம் என்ன நடந்தது என்று தெரியாது என்றும் உடல் மட்டும் வலிக்கும் அதன் பிறகு தான் தமக்கு ஏதோ தவறு நடந்து இருக்கிறது என்று உணர்வோம் என்றும் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் ராஜகோபாலன் தங்களை ஆபாசமாக தனது செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்து கொண்டு, மிரட்டி தங்களை சீரழித்தார் என்று பல மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

வாக்குமூலம் அளித்த முன்னாள் மாணவிகளில் பலர் தற்போது பெரிய நிறுவனங்களில் பணியாற்றி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் அண்ணாநகர் கிளையில் உள்ள பத்மா சேஷாத்திரி மில்லினியம் பள்ளியில் படித்து வரும் மாணவிகளுக்கு தற்காப்பு கலைகள் சொல்லிக்கொடுத்து வந்த கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ், கராத்தே பயிற்சியில் ஈடுபட்ட மாணவிகளை பள்ளியின் தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக 2 மாணவிகள் வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளித்தனர்.

Also Read  "ஓஎன்வி விருதை திருப்பி அளிக்கிறேன்" - வைரமுத்து

அந்த புகாரின்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கண்காணிப்பாளர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் போலீசார் கராத்தே மாஸ்டர் கெவின் ராஜை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, அதிகாலையில் கராத்தே பயிற்சிக்கு வரும் போது மாணவிகளை தனி அறைக்கு அழைத்து சென்று தொந்தரவு கொடுத்து வந்தது தெரியவந்தது.

மேலும், கராத்தே பயிற்சி உடையை மாணவிகள் மாற்றும் போது அதை ஒளிந்து இருந்து பார்த்து மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கராத்தே மாஸ்டர், செல்போனை ஆய்வு செய்த போது சில மாணவிகளின் ஆபாச படங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ் மீது அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் ஐபிசி 376 (பாலியல் வன்கொடுமை), 506(i) கொலை மிரட்டல், 354 உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு கைது செய்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முகக்கவசம் அணியாதவர்கள், தனி மனித இடைவெளியைப் பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Tamil Mint

“ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது மக்களுக்கு செய்யும் பச்சை துரோகம்” – சீமான்

Lekha Shree

சென்னையில் ஒரு பெய்ரூட்? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

Tamil Mint

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?

Tamil Mint

அழியாத மனிதநேயம் – ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிதியாக வழங்கிய செக்யூரிட்டி!

Lekha Shree

“பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல”

Tamil Mint

பல்லாவரம் நகராட்சி அதிகாரிகளின் அப்பட்டமான மனித உரிமை மீறல் !?

Tamil Mint

மின்வாரியத்துறை தனியார் மயமாக்கப்படும் உத்தரவு ரத்து: அமைச்சர் தங்கமணி

Tamil Mint

ஈபிஎஸ் ராஜினாமா – மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து!

Lekha Shree

#BREAKING:தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு ஒத்திவைப்பு! – முழு விவரம் இதோ!

Shanmugapriya

நான் எச்சரித்திருக்காவிட்டால் அண்ணா பல்கலைக்கழகம் இல்லாமல் போயிருக்கும்: ஸ்டாலின்

Tamil Mint

தமிழகத்தில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil Mint