a

PSBB பள்ளி இருக்கும் நிலத்தை காமராஜர் வழங்கியது ஏன்? ஏமாற்றி மாற்றியமைக்கப்பட்டதா அந்த பள்ளி?


உண்மையில் பத்ம சேஷாத்ரி பள்ளியின் முதன்மை உரிமை யாருக்கு என்பது தொடர்பாக ஒய்ஜிபி குடும்பத்தார் மீது நீண்டநாட்களாக ஒரு வழக்கொன்று நடந்துகொண்டிருந்தது.

அந்த பள்ளியை அவர்கள் சட்டவிரோதமாக கைப்பற்றிக்கொண்டார்கள் என்பது குற்றச்சாட்டு.

இந்த பள்ளி, பாலபவன் என்கிற பெயரில் பொதுசேவையில் ஈடுபட பெண்கள் சிலர் இணைந்து சங்கம் அமைத்து கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்டது என்றும் அந்த மகளிர் கூட்டு முயற்சிக்குதான்அன்றைய காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் அரசு அரசாங்க நிலத்தை பொதுப்பள்ளியின் பயன்பாட்டுக்கு கொடுத்ததாகவும் ஆனால் காலப்போக்கில் அந்த பள்ளியின் நிறுவன உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் ஒய்ஜிபி குடும்பம் ஓரம்கட்டி மொத்த பள்ளியையும் தானே கைப்பற்றிக்கொண்டார்கள் என்பதும் தான் வழக்கின் பிரதான குற்றச்சாட்டே.

பள்ளியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த திருமதி ஒய்ஜிபி பள்ளியின் பெயரையும் பால பவன் என்பதில் இருந்து தன் பேருக்கு மாற்றிக்கொண்டதோடு பொது அமைப்பாக இருந்த அந்த பள்ளியை தன் குடும்ப நிறுவனமாக மாற்றிக்கொண்டார் என்பது கூடுதல் குற்றச்சாட்டுகள்.

Also Read  பிரபல தனியார் பள்ளியின் ஆசிரியர் மீது குவியும் பாலியல் புகார்கள்... நடந்தது என்ன?

அதனால் பாதிக்கப்பட்ட நிறுவன உறுப்பினர்களில் ஒருவர் திருமதி ஒய்ஜிபிக்கு எதிராக அந்த வழக்கை தொடுத்திருந்தார். அந்த வழக்கு கட்டுகளோடு அவர் தமிழ்நாட்டு ஊடகங்களின் கதவை நீண்டகாலம் தட்டிக்கொண்டிருந்தார்.

ஆனால் அவர்களுக்கு இருந்த செல்வாக்கால் இவருக்கு யாரும் உதவ முன்வரவில்லை. தமிழ்நாட்டு அரசாங்கம் அந்த பழைய புகார்களையும் விசாரித்து உண்மையை கண்டறியவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Also Read  பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்

ஏனெனில் இந்த பள்ளியின் நிலம் அரசாங்க நிலம். பொதுப்பயன்பாட்டுக்காக கொடுக்கப்பட்டது. அதை தனியார் அபகரிப்பு செய்வது சட்டப்படி குற்றச்செயல் என்பதால் உரிய நடவடிக்கை தேவை என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

பத்ம சேஷாத்ரி பள்ளி பொதுப் பள்ளியாக இருந்ததால் அதற்குப் பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த போது இடம் கொடுத்துள்ளார். அப்பள்ளிக்கு அடிக்கல்லும் நாட்டியுள்ளார்.

பத்ம சேஷாத்ரி குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக அறக்கட்டளையைக் கைப்பற்றி பள்ளியை அபகரித்துக் கொண்டது. இதுகுறித்து அறக்கட்டளை உறுப்பினர் ஒருவர் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

psbb tnagar branch-ல் எத்தனை கட்டிடம் அனுமதி இன்றி கட்டி இருக்கிறார்கள் என்றும் அதன் மீதான நடவடிக்கை என்ன என்பது குறித்தும் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டுள்ளார்.

Also Read  சாமானியரை பாதிக்கும் மாற்றங்கள்… இன்று முதல் புதிய விதிகள் அமல்..!

அதற்கு அந்த முகவரியில் எந்த கட்டிடம் கட்டுவதற்கும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதி வழங்கவில்லை என்று பதில் கிடைத்துள்ளது. அனுமதி இன்றி கட்டிடம் கட்டிய பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யக்கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

Tamil Mint

மு.க.ஸ்டாலினுக்கு சிவக்குமார், சூர்யா வைத்த சூப்பர் கோரிக்கை…!

sathya suganthi

திமுக வேட்பாளர் பட்டியலில் 49 புதுமுகங்களுக்கு வாய்ப்பு..!

Lekha Shree

கொரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவத்தை அரசு ஊக்கமளிப்பது வருத்தமளிக்கிறது.. திமுக எம்.பி ட்வீட்

Ramya Tamil

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்- மத்திய அரசுக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்

sathya suganthi

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்துக்குதான் – மாவட்ட ஆட்சியர் உறுதி

sathya suganthi

“ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி!

Lekha Shree

மக்களே இரவு நேர ஊரடங்கிற்கு தயாராகுங்கள்? – தமிழக முதல்வர் இன்று அவசர ஆலோசனை!

Lekha Shree

சென்னையில் பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை

Tamil Mint

பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? முழுவிவரம் இதோ.!

Tamil Mint

கலாய்த்த நியூஸ் வெப்சைட் – தன் பாணியில் பதிலடி கொடுத்த ராதிகா…!

Devaraj

சிபிஐ விசாரணை கோரும் சூரி

Tamil Mint