a

பிரபல தனியார் பள்ளியின் ஆசிரியர் மீது குவியும் பாலியல் புகார்கள்… நடந்தது என்ன?


சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பால பவன் (பி.எஸ்.பி.பி) பள்ளியின் மாணவர்கள் பலர் அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் புகார்களை முன்வைத்துள்ளனர்.

இப்பள்ளியை நடத்துபவர் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் மகள் மதுவந்தி. மேலும், ராஜகோபாலன் காமர்ஸ் (Commerce) ஆசிரியர்.

பாடகி சின்மயி மற்றும் மாடல் கிருபாலி ஆகியோர் தற்போதைய மற்றும் முன்னாள் மாணவர்களின் அனுபவங்களை சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மே 23 அன்று, பி.எஸ்.பி.பி பள்ளியின் முன்னாள் மற்றும் தற்போதைய மாணவர்கள் தங்களின் ஆசிரியர் ஒருவர் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர்.

Also Read  PSBB பள்ளியில் ஏ.ஆர்.ரஹ்மான் சந்தித்த மோசமான அனுபவங்கள்! சாதி ரீதியில் துன்புறுத்தப்பட்டாரா?

இந்த சம்பவங்களை சிலர் ட்விட்டரில் பகிர்ந்ததன் மூலம் இந்த விவகாரம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும், சிலர் அப்பள்ளி வளாகத்தில் சாதிவெறி நடைமுறையில் இருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

ஒரு சில மாணவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள முன்வந்தது அடுத்து தற்போது பல முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் அந்த ஆசிரியர் தங்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டதை பகிர்ந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர்.

Also Read  ‘கோவிஷீல்ட்’ தன்னார்வலரின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு: சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா

இதனால், பல சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரும் சமூக வலைத்தளத்தில் அந்த ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகிர தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்த ஆன்லைன் பிரச்சாரத்தை முன்னிலைப்படுத்தியது பாடகி சின்மயி மற்றும் மாடல் கிருபாலி .

மாடல் கிருபாலி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கி, மாணவர்களை தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.

Also Read  பேய் பிடித்ததாக கூறி 7 வயது சிறுவனை கொன்ற தாய்…!

அதன்படி, நிறைய மாணவர்கள் தங்களின் மோசமான அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

அவ்வாறு ஒரு மாணவி பகிர்ந்துள்ள ஸ்கிரீன்ஷாட்டில் அந்த ஆசிரியர் ஆன்லைன் வகுப்புக்கு வெறும் டவல் அணிந்து வருவார் என்று கூறியதுடன் அந்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

அதைத்தொடர்ந்து ஒரு மாணவி, ராஜகோபாலன் தகாத கருத்துக்களை கூறுவது, தகாத முறையில் தொடுவது மற்றும் திரைப்படங்களுக்கு வரும்படி கேட்பது என அநாகரிகமாக நடந்துகொள்வார் என கூறியுள்ளார்.

மேலும், ராஜகோபாலன் வகுப்பு வாட்ஸ் அப் குழுவில் ஒரு ஆபாச இணைப்பைப் பகிர்ந்து கொண்டார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், இதுகுறித்து டீனிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மாணவிகள் மட்டுமல்லாது ஒரு மாணவனும் தனது அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார். அதில், அந்த ஆசிரியர் தான் செல்போன் கொண்டுவந்ததாக பொய் புகார் கூறி அவரது அந்தரங்க பகுதியை தொட்டதாக புகார் அளித்துள்ளார்.

இவ்வளவு புகார்கள் மாணவர்களாலும் பெற்றோர்களால் மேலிடத்தில் அளிக்கப்பட்டும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர் அப்பள்ளியின் மாணவர்கள் பலர்.

இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பலர் கூறி வருகின்றனர். ஆனால், பள்ளி நிர்வாகம் தற்போது வரை மவுனம் காத்துவருவது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பேரறிவாளனுக்கு பரோல்

Tamil Mint

பொதுத் துறையான போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க தமிழக அரசு திட்டமா?

Tamil Mint

எளிமையாக நடந்து சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்த முதலமைச்சர்…!

Devaraj

முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா…? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன விளக்கம்…!

sathya suganthi

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு விருதுகளை அறிவித்தார் முதல்வர்

Tamil Mint

கொரோனா வைரஸ் காற்றில் பரவுவதற்கு சாத்தியங்கள்-உலக சுகாதார நிறுவனம்

Tamil Mint

சாத்தான்குளம் விவகாரம்: சிபிஐ விசாரணை இன்று தொடக்கம்

Tamil Mint

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை

Tamil Mint

கொரோனா அப்டேட் – தமிழகத்தில் ஒரேநாளில் 478 பேர் உயிரிழப்பு..!

Lekha Shree

ரஜினி இன்னும் கட்சியே தொடங்கவில்லை. அவரை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்? – உதயநிதி ஸ்டாலின்

Tamil Mint

அண்ணா பிறந்த நாள்: முதல்வர் மரியாதை

Tamil Mint

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60,000-ஐ எட்டும்! வெளியான அதிர்ச்சி தகவல்!

Lekha Shree