a

PSBB பள்ளி வளாகத்தில் மாணவிகளை மிரட்டி கராத்தே மாஸ்டர் பலாத்காரம் – பகீர் தகவல்கள்


சென்னை விருகம்பாக்கம் பத்மா சேஷாத்ரி மில்லினியம் பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி அளிக்கும் கராத்தே மாஸ்டர், சிறப்பு பயிற்சி கொடுப்பதாக தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் புகார் அளித்திருந்தனர்.

அந்தரங்க பகுதிகளில் கைகளை வைத்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும் காவல்துறை வாட்ஸ் ஆப் நம்பருக்கு மாணவிகள் புகார் அளித்திருந்தனர்.

அந்த புகாரின்படி அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் கராத்தே மாஸ்டர் கெபி ராஜை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது கராத்தே மாஸ்டர் கெபி ராஜ் தனது தற்காப்பு பயிற்சிக்கு அதிகாலையில் பள்ளிக்கு வரும் மாணவிகள் பயிற்சி உடையை மாற்றும் போது, மாணவிகளுக்கு தெரியாமல் மறைந்து இருந்து தனது செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.

Also Read  9,10,11 மற்றும் 12 ஆகிய வகுப்புகள் செயல்பட வரும் 16 ஆம் தேதி முதல் அனுமதி.

அதோடு இல்லாமல் பள்ளிகளுக்கு இடையே மாநில அளவில் நடைபெறும் தற்காப்பு போட்டியில் கலந்துகொள்ள மாணவிகளை அழைத்து செல்லும் போது, ஓட்டல் அறையில் வைத்து பழைய வீடியோக்களை காட்டி மிரட்டி நண்பர்களுடன் பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், உடனே கராத்தே மாஸ்டர் கெபி ராஜின் நண்பர்கள் 3 பேரை பிடித்து விடிய விடிய தீவிர விசாரணை நடத்தினர்.

Also Read  ஊரடங்கு நேரத்தில் ஊர் சுற்றியவர்களுக்கு அபராதம்!

அப்போது, கராத்தே மாஸ்டர் கெபி ராஜ் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அனைத்து விவரங்களையும் மறைக்காமல் 3 நண்பர்களும் போலீசாரிடம் கூறியுள்ளனர்.

பயிற்சிக்கு வரும் மாணவிகளை கராத்தே மாஸ்டர் கெபி ராஜ் மிரட்டி பள்ளி வளாகத்தில் உள்ள அறையிலேயே பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதை நாங்கள் பலமுறை நேரில் பார்த்து இருக்கிறோம் என்றும் கெபி ராஜ் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

சில நேரங்களில் நாங்களும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தோம் என்று ஒப்புக்கொண்டுள்ளனர் என்றும் இதை, நீதிமன்றத்தில் வாக்குமூலமாகவும் கொடுக்க தாங்கள் தயாராக இருப்பதாக அப்ரூவராக 3 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதைதொடர்ந்து பத்மா சேஷாத்திரி பள்ளியின் கராத்தே மாஸ்டர் கெபி ராஜ் மீது பாலியல் பலாத்காரம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

Also Read  தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பத்மா சேஷாத்திரி பள்ளி கராத்தே மாஸ்டர் கெபி ராஜை சைதாப்பட்டையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்தினர்.

பின்னர் நீதிபதி மகாராஜன் உத்தரவுப்படி போலீசார் வரும் 14ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பெண் மருத்துவர் திடீர் மரணம் – திருமணமான மூன்றே மாதத்தில் சோகம்

Devaraj

குழந்தை பிறப்பு முதல் பிணவறை வரையில் எல்லா துறைகளிலும் கையூட்டு பெறப்படுகிறது: கமல்ஹாசன்

Tamil Mint

எனக்கு இந்தி தெரியுமா? உண்மையை உடைக்கும் கனிமொழி

Tamil Mint

எம்எல்ஏ பிரபு திருமண விவகாரத்தில் தீர்ப்பு தள்ளி வைப்பு

Tamil Mint

அதிமுக கூட்டணியில் பாமக? வன்னியர் இடஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் முடிவு?

Tamil Mint

திமுக எம்.எல்.ஏ.களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Tamil Mint

மனதில் உள்ளதை அனுப்புங்கள் – தொண்டர்களின் கருத்தை கேட்கும் கமல்ஹாசன்

sathya suganthi

ஊட்டி, கொடைக்கானலில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

Tamil Mint

அடுத்த 24 மணி நேரத்துக்கு பலத்த மழை எச்சரிக்கை

Tamil Mint

கொரோனாவால் அதிகமாக உயிரிழப்பது இவர்கள் தான்.. மருத்துவர் தகவல்….

Ramya Tamil

“மிக விரைவில் அதிமுக சசிகலாவை நோக்கி வரும்” – சி.ஆர். சரஸ்வதி

Lekha Shree

தமிழகத்தில் மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கு நீட்டிப்பு…!

Devaraj