a

PSBB பள்ளி பாலியல் வழக்கு: கைதான ராஜகோபாலன் பரபரப்பு வாக்குமூலம்!


மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கைதான சென்னை பால சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடைபெற்றுள்ளது.

விசாரணையில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். பி எஸ் பி பி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.

Also Read  தடகள பயிற்சியாளர் மீது குவியும் பாலியல் புகார்கள்..! காவல்துறை விசாரணை..!

20 ஆண்டுகளாக அந்த பள்ளியில் காமர்ஸ் ஆசிரியர் ஆக பணியாற்றி வரும் இவர் மீது பள்ளியின் முன்னாள் மாணவிகள் பலரும் அடுக்கடுக்கான குற்றச்சாடுகளை வைத்து வருகின்றனர்.

இந்த புகாரை அடுத்து நேற்று கைது செய்யப்பட்ட ராஜகோபாலனிடம் இரவு முழுவதும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

அதில் அவர் கடந்த 5 ஆண்டுகளாக 11,12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

அதுமட்டும் இன்றி பள்ளியில் உள்ள வேறு சிலருக்கும் இதில் தொடர்புள்ளதாகவும் ராஜகோபாலன் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  "ஆன்லைன் வகுப்புகள் ரெக்கார்ட் செய்யப்பட வேண்டும்" - முதலமைச்சர் அதிரடி!

பாலியல் புகார் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததும், செல்போனில் உள்ள முக்கிய தகவல்களை நீக்கி உள்ளார் ராஜகோபாலன்.

பள்ளியில் தன்னைப் போன்று மேலும் சில கருப்பு ஆடுகள் உள்ளதாகவும் ராஜகோபாலன் கூறியதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

அப்படியானால் பி எஸ் பி பி பள்ளியில் ராஜகோபாலன் போல பல ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்தது அம்பலமாகியுள்ளது.

இப்போது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read  பிஎஸ்பிபி பள்ளி சம்பவத்தின் எதிரொலி - அமைச்சர் அன்பில் மகேஷ் நடவடிக்கை!

ராஜகோபால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட உள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆ.ராசா சர்ச்சை பேச்சு… நழுவுகிறதா திமுக வெற்றி வாய்ப்பு?

Lekha Shree

மூக்கு வழி செல்லும் மருந்துதான் குழந்தைகளிடம் கொரோனா தொற்றை தடுக்கும் – மருத்துவர்

sathya suganthi

வீடுதோறும் வாஷிங்மிஷின் வழங்க அரசிடம் எங்கு பணம் உள்ளது? – சீமான்

Devaraj

“கசப்பான அனுபவத்திற்கு தயாராகுங்கள்!” – தேர்தலுக்கு பின் கடுமையாகும் கொரோனா கட்டுப்பாடுகள்!

Lekha Shree

மேட்டூர் உபரிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்!

Lekha Shree

பாமக மீது நடவடிக்கை கோரி மனு

Tamil Mint

அண்ணா அறிவாலயத்தில் திமுகவினரின் “உதயசூரியன்” கடிகாரம்…!

Lekha Shree

ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31 வரை மட்டுமே ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி…!

Lekha Shree

சத்தியமூர்த்தி பவனுக்கு ஸ்டாலின் திடீர் வருகை

Tamil Mint

தென் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….

VIGNESH PERUMAL

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள்

Tamil Mint

டிசம்பருக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் – அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தல்

Tamil Mint