“ஆடி” சொகுசு கார் இல்லையா…! சந்தேகத்தை கிளப்பிய பப்ஜி மதனின் மனைவி…!


தடை செய்யப்பட்ட விளையாட்டை தனது கணவர் விளையாடவில்லை என்றும் 20 மணி நேரம் வேலை செய்து பணம் சம்பாதித்தார் என்றும் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா தெரிவித்துள்ளார்.

யூடியூப்பில் ஆபாச வீடியோக்களை வெளியிட்டதாக பப்ஜி மதன் கடந்த மாதம் 18 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

விசாரணையில், யூடியூப் சேனலில் வீடியோக்களை வெளியிட்டு கோடிக்கணக்கில் மதன் பணம் சம்பாதித்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்து 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரது வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன.

சிறையில் அடைக்கப்பட்ட பப்ஜி மதன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்த நிலையில், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பரிந்துரை செய்தனர். இதனை ஏற்று கமி‌ஷனர் சங்கர் ஜிவால், பப்ஜி மதனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில், மதன் நடத்திய யூடியூப் சேனலுக்கு அட்மினாக இருந்த அவரின் மனைவி கிருத்திகாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  ஜாமீன் பெற்று தற்போது வெளியில் இருக்கிறார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தடை செய்யப்பட்ட விளையாட்டை எனது கணவர்  மதன் விளையாடவில்லை என்றும் பப்ஜி விளையாடி கடந்த 10 ஆண்டுகளாக சொத்து சேர்க்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆடி கார் மட்டுமே தங்களிடம் உள்ளது எனக்கூறிய கிருத்திகா, சொகுசு கார் தங்களிடம் இல்லை என்றார்.

யூடியூப் சேனலை முடக்கியுள்ளதால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் மதன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதன் பணமோசடி எதையும் செய்யவில்லை, சொத்துக்கள் வாங்கி குவிக்கவில்லை என்றும் கிருத்திகா தெரிவித்துள்ளார்.

Also Read  ஆன்லைன் கேம் 'Free Fire'க்கு தடை விதிக்கப்படுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமைச்சர் துரைக்கண்ணு நலம்பெற ஸ்டாலின் வாழ்த்து

Tamil Mint

ஏடிஎம் இயந்திரத்தையே ஏமாற்றி கொள்ளை – இனி பணம் எடுக்க தடை!

Lekha Shree

மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா பரவல்…! தமிழக அரசு போட்டுள்ள கட்டுப்பாடுகள்…!

Devaraj

தை அமாவாசை: ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அலைமோதும் மக்கள் கூட்டம்!

Tamil Mint

நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி, இணையதளத்தில் இருந்து நீக்கம்

Tamil Mint

பெரியார் சிலை மீது காவிச் சாயம் வீச்சு: கோவையில் பரபரப்பு

Tamil Mint

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

Tamil Mint

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து நவ.9-ம் தேதி தலைமை ஆசிரியர்களிடம் கருத்து தெரிவிக்கலாம்

Tamil Mint

லஞ்சப் புகாரில் மத்திய பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் கைது: ஒப்பந்ததாரர்களும் கையும் களவுமாக சிக்கினர்

sathya suganthi

“டெல்டா பிளஸ்” கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் 10 ஆக உயர்வு

sathya suganthi

8 மாவட்டங்கள்….! எல்லா தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வாஷ்அவுட்…!

sathya suganthi

கடலூரில் பயங்கர தீ விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

Lekha Shree