புதுக்கோட்டை: தலையில் குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு…!


புதுக்கோட்டையில் தலையில் குண்டு பாய்ந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

புதுக்கோட்டை நார்த்தாமலை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது 11 வயது சிறுவன் மீது குண்டு பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை நார்த்தாமலை அருகே அம்மாசத்திரத்தில் துப்பாக்கி பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.

அந்த வகையில் இன்று மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

Also Read  தூக்கில் தொங்கிய காதலன்…ஆற்றில் குதித்த காதலி…. ஆணவக்கொலையா என விசாரணை….

இந்த பயிற்சியின்போது வீரர் ஒருவரின் துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு தவறுதலாக 11 வயது சிறுவன் தலையில் பட்டுள்ளது.

அந்த வீரரின் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய இரண்டு தோட்டாக்கள் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் சென்று இருக்கிறது.

அதில் ஒன்று முத்து என்பவரின் வீட்டின் சுவற்றை துளைத்தது. மற்றொன்று வீட்டின் வெளியே நின்றிருந்த அவரது பேரன் புகழேந்தியின் தலையில் பாய்ந்ததாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த சிறுவன் புகழேந்தியை உறவினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு ஆபத்தான நிலையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு சிறுவன் மாற்றப்பட்டார்.

இதனால், அந்த துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

Also Read  "கல்லூரிகளில் சேர வரும் 26ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்" - அமைச்சர் பொன்முடி

துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுவது முன்கூட்டி அறிவித்தால் அந்த கிராம மக்கள் வெளியேற்றம் செய்தால் இது போன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்கலாம் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

புதுக்கோட்டை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது சிறுவன் மீது குண்டு பாய்ந்த விவகாரம் தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்பு பிரிவு போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

போலீசார் பயன்படுத்திய குண்டு 300 மீட்டர் வரை மட்டுமே செல்லக்கூடியது என்றும் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு, மலைக்குன்றின் மீது பட்டு சிதறியதால் தோட்டாவின் துகள்கள் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று, சிறுவன் தலையில் பாய்ந்தது என முதல் கட்ட தகவல் அளிக்கப்பட்டது.

Also Read  "பீகாரிகளுக்கு மூளை கம்மி!" - அமைச்சர் நேரு பேச்சால் சர்ச்சை!

தஞ்சை மருத்துவமனையில் 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் சிறுவன் தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டது.

அதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் சிறுவன் புகழேந்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிறுவன் புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரபல யூடியூப் சமையல் கலைஞர் ‘டாடி’ ஆறுமுகம் மகன் கைது..! காரணம் இதுதான்..!

Lekha Shree

காஞ்சிபுரம் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனம் ரத்து

Tamil Mint

கண்கலங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்…! உணர்ச்சி பெருக்கில் கோபாலபுர இல்லம்…!

sathya suganthi

தமிழகம்: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை

Tamil Mint

“எஸ்.பி.வேலுமணி மீது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி” – வானதி சீனிவாசன்

Lekha Shree

”ஒரு கிலோ இறைச்சிக்கு ஒரு கிலோ பெட்ரோல் இலவசம்” … ஆடி மாத சலுகையை அறிவித்த இறைச்சி கடை!

suma lekha

திமுக தலைவர் மு க ஸ்டாலின் மகள் செந்தாமரை இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

Jaya Thilagan

என்னை விமர்சிப்பதை பற்றி நான் கவலைப்படவில்லை: ஸ்டாலின்

Tamil Mint

ப.சிதம்பரம் மருமகளின் புகைப்படத்தை பயன்படுத்திய பாஜக!

Lekha Shree

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுகிறார் முதல்வர்: திறக்கப்படுமா திரையரங்குகள்?

Tamil Mint

பிக் பாஸ் டேனி மீது குவியும் பாலியல் புகார்கள்…! நடந்தது என்ன?

Lekha Shree