புதுக்கோட்டை சிறுவன் உயிரிழப்பு – மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மீது வழக்குப்பதிவு..!


புதுக்கோட்டை சிறுவன் மீது குண்டு பாய்ந்த வழக்கில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மீது 304ஏ பிரிவின் (அஜாக்கிரதையாக மரணம் ஏற்படுத்துதல்) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை நார்த்தாமலை அருகே அம்மாசத்திரத்தில் துப்பாக்கி பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.

அந்த வகையில் இன்று மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்த பயிற்சியின்போது வீரர் ஒருவரின் துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு தவறுதலாக 11 வயது சிறுவன் தலையில் பட்டுள்ளது.

அந்த வீரரின் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய இரண்டு தோட்டாக்கள் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் சென்று இருக்கிறது. அதில் ஒன்று முத்து என்பவரின் வீட்டின் சுவற்றை துளைத்தது. மற்றொன்று வீட்டின் வெளியே நின்றிருந்த அவரது பேரன் புகழேந்தியின் தலையில் பாய்ந்ததாக கூறப்படுகிறது.

Also Read  தொழிற்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு - சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்..!

இதில் படுகாயமடைந்த சிறுவன் புகழேந்தியை உறவினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஆபத்தான நிலையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு சிறுவன் மாற்றப்பட்டார்.

தஞ்சை மருத்துவமனையில் 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் சிறுவன் தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டது.

Also Read  பணமோசடி வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது…!

அந்த துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுவது முன்கூட்டி அறிவித்தால் அந்த கிராம மக்கள் வெளியேற்றம் செய்தால் இது போன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்கலாம் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிறுவன் புகழேந்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிறுவன் புகழேந்தி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

Also Read  திருக்கோவில் எனும் பெயரில் தொலைக்காட்சி-தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சிறுவன் புகழேந்தியின் மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்து ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்பு பிரிவு போலீசார் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது 304ஏ பிரிவின் (அஜாக்கிரதையாக மரணம் ஏற்படுத்துதல்) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது” – கனிமொழி எம்.பி.

Lekha Shree

தமிழகம்: வெள்ளத்தில் தத்தளிக்கும் தலைநகரம்…! மீட்பு பணிகள் தீவிரம்..!

Lekha Shree

“அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” – செல்லூர் ராஜு

Lekha Shree

திருப்பதிக்கு பக்தர்கள் இப்போது வர வேண்டாம்! – தேவஸ்தானம் அறிவிப்பு..!

Lekha Shree

அறிஞர் அண்ணாவின் நினைவு தினம்: ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

Tamil Mint

“முகக்கவசம் அணிந்து மக்கள் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும்” – சீமான் அறிவுரை

Lekha Shree

முதுகுளத்தூர் மாணவர் மரணம்: உடலை மறுகூராய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு..!

Lekha Shree

ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை வரும் 28-ம் தேதி முதல்வர் பழனிசாமி திறந்துவைக்கிறார்

Tamil Mint

தலைமை செயலக வடிவில் கேக்.. திமுகவை கடுமையாக விமர்சித்த பாஜக ஆதரவாளர்..

Ramya Tamil

முழு ஊரடங்கு – வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்…!

Devaraj

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்ன ?

Tamil Mint

விஜய்யின் தந்தை பெயரில் கட்சி தொடங்க முடிவு? கட்சி நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் தீவிரம்!

Tamil Mint