புனித் ராஜ்குமாரின் கடைசி ஆசையினை நிறைவேற்ற குடும்பத்தினர் முடிவு!


மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசி ஆசையினை நிறைவேற்ற அவருடைய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

கன்னட சினிமாவின் பவர்ஸ்டார் புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த புனித் ராஜ்குமார், கடைசியாக நடித்த ‘யுவரத்னா’ படம் மிகப்பெரிய அளவில் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.

Also Read  குத்தாட்டம் போடும் ராஷ்மிகா மந்தனா! வைரலாகும் வீடியோ..

இப்படி ஒரு நிலையில் புனித் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவருடைய இழப்பு ரசிகர்களுக்கும், பிரபலங்களுக்கும் பேரிடியாக இருந்தது.

இதையடுத்து கண்டீரவா ஸ்டுடியோ வளாகத்தில் அவருடைய தந்தை ராஜ்குமார் நினைவிடத்தின் அருகில் இவருடைய உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவருடைய நினைவிடத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர் .

Also Read  "தெறி", "மாரி" திரைப்படங்களின் மூத்த நடிகர் மரணம்…!

இந்நிலையில் புனித் ராஜ்குமார் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு தனது தந்தை ராஜ்குமார் பிறந்த ஊரான காஜனூருக்கு சென்றுள்ளார்.

All about Power Star Puneeth Rajkumar and his filmy family - Movies News

அங்குள்ள பாழடைந்த நிலையில் இருந்த வீடுகளை பார்வையிட்ட அவர், அதனை சீரமைத்து தனது தந்தை பெயரில் பெரிய நினைவில்லம் கட்டவும், அவருடைய புகழை பரப்ப அருங்காட்சியகம் அமைக்கவும் திட்டமிட்டிருந்தார். அதோடு கல்வி சார்ந்த பணிகளையும் தொடங்க இருந்தார். இந்த நிலையில் புனித் ராஜ்குமாரின் ஆசையை நிறைவேற்ற அவருடைய சகோதரர்கள் சிவராஜ்குமார் ராகவேந்திர ராஜ்குமார் இருவரும் முடிவு செய்துள்ளனர். மேலும் புனித் ராஜ்குமாரின் கடைசி ஆசையை நிறைவேற்ற அவருடைய குடும்பத்தினர் முயற்சி செய்து வருவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read  தமிழ் நடிகர்களை எதிர்க்கும் புனீத் ரசிகர்கள்...காரணம் என்ன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

’ஒ சொல்றிய’ பாடலை இயேசு கடவுளின் பாடலாக மாற்றிய போதகர்.. வைரலாகும் வீடியோ..!

suma lekha

” ’83’ திரைப்படம் பிரமாதம்”.. பாராட்டிய ரஜினிகாந்த்..!

suma lekha

அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி… திடீர் அறுவை சிகிச்சைக்கு திட்டம்…!

HariHara Suthan

வாய்ப்புகளை மறுத்த பிரபல நடிகை… அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட நயன்தாரா..!

Lekha Shree

ரசிகர்கள் செயல் : ரஜினி ரசிகர் மன்றம் கண்டனம்

suma lekha

ஜூலையில் தொடங்கும் தனுஷின் ‘D43’ படத்தின் படப்பிடிப்பு..!

Lekha Shree

அச்சு அசலாக சமந்தா போல மாறிய விஜய் டிவி பிரபலம்!

HariHara Suthan

“குடும்பத்தில் 14 பேருக்கு கொரோனா” – மாஸ்டர் பட பிரபலம் உருக்கம்

Shanmugapriya

“ஓஎன்வி விருதை திருப்பி அளிக்கிறேன்” – வைரமுத்து

Lekha Shree

நிக்கி கல்ராணிக்கு கொரோனா, அதிர்ச்சியில் நடிகர்கள்

Tamil Mint

ஈஸ்வரன் படம் வெளியாவதில் சிக்கல்: ”100% இருக்கைகள் குறைக்கப்பட்டால் மாஸ்டர் மட்டுமே வெளியாகும்”!

Tamil Mint

‘கர்ணன்’ தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் நடிகர் யார் தெரியுமா?

Lekha Shree