“மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் இறுதிச்சடங்குகள் நாளை நடைபெறும்” – கர்நாடகா முதல்வர்


மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் உடலை இறுதியாக காணவும் அஞ்சலி செலுத்தவும் அவரது ரசிகர்கள் கூட்டம் அலைமோதுவதால் கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை அவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என அறிவித்துள்ளார்.

பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமார்-பர்வதம்மா தம்பதியின் மகனாக புனித் ராஜ்குமார் ஏராளமான கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து மக்களின் மனம் கவர்ந்த நடிகரானார். அவரை ரசிகர்கள் செல்லமாக அப்பு என அழைப்பர்.

Also Read  சாலையோரம் இறந்துகிடந்த பிரபல இயக்குனர்…! திரையுலகினர் அதிர்ச்சி..!

கன்னட திரையுலகில் அதிக பட்ச ஊதியம் பெறும் நடிகராக வலம் வந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி புனித் ராஜ்குமார் என் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 46.

இந்நிலையில், அவரது இந்த திடீர் மறைவு செய்தியறிந்த அவரது 3 தீவிர ரசிகர்கள் மாரடைப்பால் உயிரிழந்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read  “விவசாயிகள் பற்றி பேசும்போது பாலியல் அச்சுறுத்தல்கள் வருகின்றன” -இங்கிலாந்து நடிகை

புனீத் ராஜ்குமார் கன்னட ரசிகர்களின் இதய துடிப்பாக இருந்தவர். இவரது தொண்டு செய்யும் குணம், மக்களுக்கு செய்யும் சேவைகள் இவைகளால் இவர் எல்லை கடந்தும் நேசிக்கப்படும் ஒரு நபராக இருப்பதால் பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள புனித் ராஜ்குமாரின் உடஉடலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் இருக்கும் புனித்தின் மகள் வந்ததும் இன்று மாலை இறுதிச்சடங்குகள் நடைபெறுவதாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்றன.

Also Read  கனமழை, நிலச்சரிவுகளால் கடும் பாதிப்பை சந்தித்து வரும் உத்தரகாண்ட்..!

ஆனால், ரசிகர்கள் கூட்டம் அலைமோதுவதால், கர்நாடகா முதல்வர் இவரது சகோதரர்கள் மற்றும் குடும்பத்தாருடன் கலந்தாலோசித்த பிறகு அவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என அறிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நயன்தாராவுடன் திருமணம் எப்போது? விக்னேஷ் சிவன் சொன்ன சூப்பர் தகவல்..!

Lekha Shree

ஆட்டோவை ஆம்புலன்ஸ் ஆக மாற்றிய ஆட்டோ ஓட்டுனர்! – குவியும் பாராட்டுக்கள்

Shanmugapriya

2021 பிப்ரவரியில் சுகாதார பணியாளர்கள், முதியவர்களுக்கு ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு

Tamil Mint

மேற்கு வங்க தேர்தலுக்கு பிறகு நாடு தழுவிய ஊரடங்கு – காங்கிரஸ் தலைவர் சொன்ன அதிர்ச்சி தகவல்…!

Devaraj

ஒரே விமானத்தில் பயணித்த 47 பயணிகளுக்கு கொரோனா..!

Lekha Shree

மரிக்காத மனித நேயம்; கொரோனா சிகிச்சை மையங்களாக மாறும் மசூதிகள்!

Shanmugapriya

சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் ஷாருக்கான் பட பிரபலம்? வெளியான ‘டக்கர்’ அப்டேட்..!

Lekha Shree

மே 12 முதல் முழு ஊரடங்கு… முதல்வர் அதிரடி உத்தரவு..

Ramya Tamil

மருத்துவர்கள் பூலோகத்தின் இறைதூதர்கள் -அந்தர்பல்டி அடித்த பாபா ராம்தேவ்…!

sathya suganthi

‘மாறன்’ – வெளியானது தனுஷின் ‘D43’ டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்..!

Lekha Shree

1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை ஆல் பாஸ்..! ஆளுநர் வெளியிட்ட அதிரடி உத்தரவு..!

Devaraj

“கோ-வின்” செயலிக்கு 50 நாடுகளில் வரவேற்பு…!

sathya suganthi