‘அப்புவிற்கு ஏற்பட்டது மாரடைப்பு கிடையாது’.. புனித்தின் கடைசி நிமிடங்கள்… குடும்ப டாக்டர் சொல்வது என்ன?


கன்னட திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான 46 வயதான ‘பவர் ஸ்டார்’ புனித் ராஜ்குமார் நேற்று முன்தினம் பெங்களூருவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவர் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார்-பர்வதம்மா தம்பதியின் இளையமகன் ஆவார். அவரது இந்த மரணம், அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், கன்னட மக்கள் மட்டுமல்லாமல் இந்திய திரை உலகத்தையும் சோக கடலில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், அவரது கடைசி நேர பரபரப்பு நிமிடங்கள் குறித்து குடும்ப டாக்டர் ரமண ராவ் கூறியிருப்பதாவது.

நடிகர் புனித் ராஜ்குமார் தனது மனைவி அஸ்வினியுடன் காலை 10.30 மணியளவில் தனது மருத்துவமனைக்கு வந்ததாகவும், அப்போது அப்புவிற்கு அதிகப்படியான வியர்வை ஏற்பட்டிருந்ததாகவும் டாக்டர் ரமண ராவ் கூறியுள்ளார்.

ஏன் வியர்வு அதிகமாக உள்ளது என்று அப்புவிடம் கேட்டபோது, அதற்கு அவர், இப்போது தான் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி முடித்துவிட்டு வருகிறேன், அதனால் வியர்க்கிறது. ஆனால் தனக்கு உடல் சோர்வாக உள்ளது, என்ன என்று தெரியவில்லை என்று டாக்டர் ரமண ராவிடம் அப்பு கூறியுள்ளார்.

Also Read  'மறுபிறவி எடுத்த கன்னட சூப்பர்ஸ்டார் புனீத்!' - கர்நாடக வனத்துறையின் செயலால் நெகிழ்ந்த ரசிகர்கள்..!

அவர் எப்போதும் உடல் சோர்வாக இருக்கிறது என்று கூறி தன்னிடம் வந்தது இல்லை என்பதால், சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு இ.சி.ஜி.(இதயத்துடிப்பு) பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அதில் அவரது இதய செயல்பாட்டில் சிறிது மாறுபாடு இருந்ததாகவும், ஆனால் அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்றும் டாக்டர் ரமண ராவ் கூறியுள்ளார்.

உடனே மருத்துவமனியில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என்று தான் அறிவுறுத்தியதாகவும், அதற்காக முன்கூட்டியே ஒரு மருத்துவ குழுவை தயாராக வைக்கும்படி விக்ரம் மருத்துவமனைக்கு தெரிவித்ததாகவும், அடுத்த 5 நிமிடத்தில் புனித் விக்ரம் மருத்துவமனைக்கு சென்றுவிட்டார் என்றும் டாக்டர் ரமண ராவ் கூறியுள்ளார்.

Also Read  மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் சமாதிக்கு நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய சிவகார்த்திகேயன்…!
Puneeth's B.P., heart rate were normal and age too seemed to be on his  side," says Dr. Ramana Rao | Kannada Movie News - Times of India

மேலும், ”புனித்திற்கு ஏற்பட்டது மாரடைப்பு கிடையாது. மாரடைப்பு ஏற்பட்டால், அதனால் அதிகப்படியான வலி ஏற்படும். ஆனால் அவருக்கு வலி இருக்கவில்லை. “கார்டியாக் அரெஸ்ட்” அதாவது இதய துடிப்பே நின்றுபோவது. அது தான் அவருக்கு ஏற்பட்டுள்ளது. அவர் ஒரு சாதாரண நபர் கிடையாது. தினசரி உடற்பயிற்சி செய்வது, நடைபயிற்சி செய்வது மற்றும் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவதில் அக்கறை செலுத்தினார். உடல் ஆரோக்கிய விஷயத்தில் அவர் எப்போதும் அலட்சியம் காட்டியது இல்லை. அவருக்கு இத்தகைய பிரச்சினை இருக்கும் என்ற சந்தேகம் யாருக்கும் ஏற்படவில்லை. அந்த அளவுக்கு அவர் ஆரோக்கியமாக இருந்தார்.

அவருக்கு திடீரென இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தங்கள் மருத்துவமனையில் அவர் மயங்கி விழவில்லை. பரிசோதனையின்போது, அவரது இதய துடிப்பு சரியாகவே இருந்தது. பரிசோதனைக்கு பிறகு அவர் நடக்க சிரமப்பட்டார். தன்னிடம் பேசும்போது சரியாகவே பேசினார். காரில் செல்லும்போது தான் அவரது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்று டாக்டர் ரமண ராவ் கூறினார்.

Also Read  சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தின் தமிழக வசூல் எவ்வளவு தெரியுமா?

தன்னிடம் வந்தபோது புனித் நன்றாக இருந்ததாக அவரது குடும்ப மருத்துவர் கூறும்நிலையில், புனித்திற்கு என்ன தான் உண்மையில் நடந்தது என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அனுஷ்கா திருமணத்தை நிறுத்திய பிரபாஸ்? இதுதான் காரணமா?

Lekha Shree

பிக்பாஸ் சீசன் 5: Wild Card Entry கொடுக்கும் சஞ்சீவ்..கசிந்த தகவல்..!

suma lekha

சூர்யாவுக்கு ஜோடியாகும் ‘கர்ணன்’ பட நடிகை? வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree

அடுத்த அதிர்ச்சி.. இயக்குனர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் மரணம்..

Ramya Tamil

வருமான வரிக்கு வட்டி… விலக்கு கேட்டு நடிகர் சூர்யா மனு… தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்..!

Lekha Shree

விபத்தில் சிக்கிய மணிமேகலை மற்றும் ஹூசைன்… நடந்தது என்ன?

suma lekha

ரஜினியின் ரீல் மகளுக்கு கொரோனா…!

Devaraj

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மீரா மிதுன்! – சாதிப் பெயரை கூறி இழிவான பேச்சு.. வலுக்கும் கண்டனங்கள்!

Lekha Shree

விரைவில் வெளியாகும் ‘எனிமி’ படத்தின் டீசர்…!

Lekha Shree

விக்னேஷ் சிவன்-நயன்தாரா ஜோடிக்கு இந்த பிக்பாஸ் பிரபலம் நண்பரா? வைரல் போட்டோ இதோ..!

Lekha Shree

பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜிக்கு கொரோனா?

Lekha Shree

தனுஷின் அடுத்த படம் குறித்து வெளியான ‘சூப்பர்’ அப்டேட்..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

Lekha Shree