a

பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இன்று மோதல்!


ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 26வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றனர்.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி இன்றிரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. பெங்களூரு அணி நடப்பு தொடரில் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது.

இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 5ல் வெற்றி கண்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியது.

புள்ளிப்பட்டியலில் முதல் 3 இடங்களை மாற்றி மாற்றி வகிக்கும் பெங்களூரு அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் மாஸ் காட்டி வருகிறது. படிக்கல், கேப்டன் கோலி, டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல் என அதிரடி பட்டாளங்கள் நிறைந்துள்ளது பெங்களூரு அணி.

Also Read  பஞ்சாபை சமாளிக்குமா ஐதராபாத்?

பவுலிங்கில் இளம் வீரர் ஷர்ஷல் பட்டேல் கலக்கி வருகிறார், அவருக்கு துணையாக வாஷிங்டன் சுந்தர், சஹல், முகமது சீராஜ் உள்ளிட்டோர் நல்ல பார்மில் உள்ளனர். அதேசமயம் பஞ்சாப் அணி நடப்பு தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 2ல் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.

4 போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. கே.எல் ராகுல், மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரான், ஷாருக்கான் என அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் அந்த அணியால் நிலைத்து ஆட முடியாதது பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.

Also Read  சதத்தால் சாதனை படைத்த சஞ்சு சாம்சன்!

வெற்றி பெறும் முனைப்பில் இன்று பஞ்சாப் அணி களமிறங்கும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்பு பஞ்சம் இருக்காது.

இதுவரை 26 போட்டிகளில் விளையாடியுள்ள இரு அணிகளில் 12 முறை பெங்களூரு 14 முறை பஞ்சாப்பும் வெற்றி பெற்றுள்ளன.

Also Read  சென்னையில் பயிற்சியை தொடங்கும் சிஎஸ்கே! விரைவில் ‘தல’ தரிசனம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சிஎஸ்கே வின் மெர்சல் ஆட்டம் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மீண்டும் ஒரு தோல்வி!

Jaya Thilagan

குருவை வீழ்த்த புது டெக்னிக் – சொல்கிறார் ரிஷப் பண்ட்!

Jaya Thilagan

தோல்வியில் இருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்?

Jaya Thilagan

உட்றாதீங்க எப்போ – வெளிநாட்டு வீரர்களுக்கு வலைவீசிய ராஜஸ்தான் ராயல்ஸ்!

Jaya Thilagan

பெங்களூரா..ஐதாராபாத்தா..ஐபிஎல்லில் யாருக்கு பலம் அதிகம்?

Devaraj

ஐபிஎல் 2021: மும்பை அணிதான் சாம்பியன் – சொல்வது யார் தெரியுமா?

Lekha Shree

கெத்தா விளையாடிய யுனிவர்சல் பாஸ் – அதிக சிக்சர்களை குவித்து சாதனை!

Devaraj

ஐபிஎல் ஏலத்தில் கண்டுகொள்ளப்படாத கான்வேயை புகழ்ந்து தள்ளிய அஸ்வின்…!

Jaya Thilagan

ஐபிஎல் மும்பை VS கொல்கத்தா போட்டி! பங்கமாக கலாய்த்த சேவாக்…

HariHara Suthan

அப்பாடா ஒரு வழியா ஜெயிச்சாச்சு – பெருமூச்சு விட்ட சன் ரைசர்ஸ் ஐதராபாத்!

Jaya Thilagan

வார்னருக்கு செக் வைத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்! வெளியில் உட்கார வைக்கப்படுவாரா – புதிய கேப்டன் யார்?

Lekha Shree

சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் போட்டியில் நிகழ்ந்த முக்கிய துளிகள்!

Jaya Thilagan