a

டெல்லியிடம் பணிந்தது பஞ்சாப்!


மும்பை வான்கடேவில் நேற்றிரவு நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற டெல்லி அணி வழக்கம்போல் பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய மயங்க் அகர்வால், கே எல் ராகுல் இணை டெல்லி அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது.

கேஎல் ராகுல் 61 ரன்களும் மயங்க் அகர்வால் 69 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க பின்னர் வந்த கிரிஸ் கையில் 11 ரன்களில் நடையை கட்டினார். நிக்கோலஸ் பூரன் அவ்வளவாக சோபிக்கவில்லை.

இளம் வீரர்கள் தீபக் ஹூடா, தமிழக வீரர் ஷாருக்கான் ஆகியோர் கடைசி ஓவர்களில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

Also Read  பயோ பபுளில் கணவர்… கண்ணாடி கேலரிக்குள் மனைவி… கிரிக்கெட் வீரரின் வைரல் புகைப்படம்!

20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

முதல் விக்கெட்டுக்கு 59 ரன்கள் குவித்த டெல்லி அணி பின்னர் விக்கெட்டுகளை கணிசமான இடைவெளியில் இழக்கத் தொடங்கியது.

Also Read  உட்றாதீங்க எப்போ - வெளிநாட்டு வீரர்களுக்கு வலைவீசிய ராஜஸ்தான் ராயல்ஸ்!

இருப்பினும் பொறுப்புடன் விளையாடிய ஷிகர் தவான் 49 பந்துகளில் 2 சிக்ஸர் 13 பவுண்டரிகளுடன் 92 ரன்கள் விளாசினார்.

ஷிகர் தவானின் அதிரடியால் டெல்லி அணி 18வது ஓவரிலேயே வெற்றியை ருசித்தது. இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் தரவரிசையில் டெல்லி அணி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Also Read  வீரர்களைத் தொடர்ந்து அம்பயர்களுக்கு வந்த சோதனை - ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய அம்பயர்கள்!

தோல்வியை தழுவிய பஞ்சாப் அணி 7வது இடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ராஜஸ்தான் – பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போர்; மனங்களை வென்ற சஞ்சு சாம்சன்!

Devaraj

வேணும்னு பண்ணல.. மொகாலியில் ஐபிஎல் நடத்தாததற்கு இதுதான் காரணம்! வாய்திறந்த பிசிசிஐ

Jaya Thilagan

கெத்து காட்டிய ஜடேஜா – சென்னை சூப்பர் கிங்ஸ் மெர்சல் வெற்றி!

Jaya Thilagan

அட கேன் வில்லியம்சன இறக்கி விடுங்கப்பா!

Devaraj

ஐபிஎல் மும்பை VS கொல்கத்தா போட்டி! பங்கமாக கலாய்த்த சேவாக்…

HariHara Suthan

ஐபிஎல் 2021: ராஜஸ்தான் அணிக்கு முதல் வெற்றி!

Lekha Shree

உட்றாதீங்க எப்போ – வெளிநாட்டு வீரர்களுக்கு வலைவீசிய ராஜஸ்தான் ராயல்ஸ்!

Jaya Thilagan

பெங்களூரா..ஐதாராபாத்தா..ஐபிஎல்லில் யாருக்கு பலம் அதிகம்?

Devaraj

பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இன்று மோதல்!

Jaya Thilagan

டெல்லி அணிக்கு வந்த சோதனை – அன்ரிச் நார்ட்ஜேவுக்கு கொரோனா!

Lekha Shree

ரன் மழை பொழிந்த பிரித்வி ஷா – டெல்லி அணி அபார வெற்றி!

Jaya Thilagan

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் – ஸ்ரேயாஸ் அய்யர் தொடரிலிருந்து விலகல், ஐபிஎல் இல் விளையாடுவது சந்தேகம்!

HariHara Suthan