a

ஊதா கலர் தொப்பி – ஐபிஎல் ல அதிக விக்கெட் எடுத்தவர் இவரா?


ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுக்கும் வீரர்களுக்கு ஊதா நிறத்திலான தொப்பி வழங்கப்படுவது வழக்கம்.

ஒவ்வொரு போட்டிக்கு பின்னரும் இந்த ஊதா நிற தொப்பி உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்கள் பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் இளம் நட்சத்திரம் ஹர்ஷல் பட்டேல் முதலிடம் வகிக்கிறார்.

இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 17 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டி உள்ளார்.

Also Read  ஐபிஎல் முக்கியமா - சாகித் அப்ரிடி விமர்சனம்!

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்ஷல் பட்டேல் வீசிய கடைசி ஓவரில் ரவீந்திர ஜடேஜா அவரது பந்து வீச்சை துவம்சம் செய்தார்.

ஒரே ஓவரில் 37 ரன்களை தாரை வார்த்த ஹர்ஷல் பட்டேல் முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை எடுத்து கொடுத்தாலும் எகனாமியில் 8.50 புள்ளிகளுடன் அதிகம் உள்ளார்.

அவரைத் தொடர்ந்து டெல்லி கேப்பிடல் அணியின் இளம் நட்சத்திரம் ஆவேஷ் கான் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 7.3 ஒன்று எக்கனாமி உடன் 12 விக்கெட்டுகளை சாய்த்து உள்ளார்.

Also Read  ஐபில் தொடரில் அதிவேக சதம் - தெறிக்க விட்ட வீரர்களின் பட்டியல்

ஹர்ஷல் பட்டேல் ஆவேஷ் கானுக்கு இடையே 5 விக்கெட்டுகள் வித்தியாசம் உள்ளது. இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் ஊதா கலர் தொப்பிக்கு ஹர்ஷல் பட்டேல் மட்டுமே இறுதி வரை சொந்தம் கொண்டாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த ராகுல் சஹர் 5 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகள் உடன் 3-வது இடத்திலும்.

Also Read  சென்னையில் பயிற்சியைத் தொடங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் கிறிஸ் மோரிஸ் ஐந்து போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகள் உடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

மோரிசுக்கு எகனாமி அதிகம் உள்ளதால் 4வது இடத்தில் உள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த தீபக் சஹர் 5 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகள் உடன் ஐந்தாம் இடம் வகிக்கிறார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“உறவினர் மரணப்படுக்கையில் இருக்கும்போது யார் கிரிக்கெட்டை பார்ப்பர்?” – ஆடம் ஜாம்ப்பா

Lekha Shree

அட கேன் வில்லியம்சன இறக்கி விடுங்கப்பா!

Devaraj

ஐபிஎல் 2021: முதல் 3 இடங்களுக்கு நிலவும் கடும் போட்டி!

Lekha Shree

10 வருஷமா எங்க சி.எஸ்.கேல பெரிசா எதையும் மாத்தல – மனம் திறந்த எம்.எஸ்.தோனி!

Jaya Thilagan

உட்றாதீங்க எப்போ – வெளிநாட்டு வீரர்களுக்கு வலைவீசிய ராஜஸ்தான் ராயல்ஸ்!

Jaya Thilagan

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இரண்டாவது வீரருக்கு கொரோனா உறுதி!

Jaya Thilagan

ரன் மழை பொழிந்த பிரித்வி ஷா – டெல்லி அணி அபார வெற்றி!

Jaya Thilagan

தோனியைவிடச் சிறந்த வீரர் ரிஷப் பண்ட் – சொல்கிறார் பர்தீவ் பட்டேல்

HariHara Suthan

கொரோனா பரவல் – ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம்!

Lekha Shree

எங்கடா கேதர் ஜாதவ்? – ஆதரவு குரல் எழுப்பும் ரசிகர்கள்!

Devaraj

ஆர்.சி.பி உடையில் கலக்கிய உசைன் போல்ட்!

Jaya Thilagan

அப்பாடா ஒரு வழியா ஜெயிச்சாச்சு – பெருமூச்சு விட்ட சன் ரைசர்ஸ் ஐதராபாத்!

Jaya Thilagan