உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி தேர்வு..!


உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை பாஜக கட்சித் தலைவராக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புஷ்கர் சிங் தாமி இன்று தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக அவர் விரைவில் பதவி ஏற்க உள்ளார்.

உத்தரகாண்ட் மாநில பாஜக முதல்வர் தீரத் சிங் ராவத் கடந்த மார்ச் மாதம் மாற்றப்பட்டு புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

அவர் தற்போது பவுரி மக்களவைத் தொகுதி எம்பியாக உள்ளார். அவர் முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில் 6 மாதங்களுக்குள் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட வேண்டும்.

உத்தரகாண்டில் கங்கோத்ரி தொகுதியும் ஹால்த் வானி தொகுதியும் காலியாக உள்ளன. இவற்றில் கங்கோத்திரி தொகுதியில் தீரத்தை நிறுத்த கட்சி முடிவு செய்திருந்தது.

Also Read  முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி நடிகை சாந்தினி மீது பரபரப்பு புகார்…!

ஆனால் அடுத்த ஆண்டு உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. பேரவையின் பதவிக்காலம் முடிவடைய ஓராண்டு மட்டுமே இருக்கும் நிலையில் சட்டப்பேரவை இடைத் தேர்தல் நடத்தப்படுவது இல்லை என்பது விதியாகும்.

எனவே தீரத்தை ராஜினாமா செய்யுமாறு கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து நேற்று அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Also Read  தலைமை செயலக வடிவில் கேக்.. திமுகவை கடுமையாக விமர்சித்த பாஜக ஆதரவாளர்..

இதனை அடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக இன்று மாலை 3 மணி அளவில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி இன்று தேர்வு செய்யப்பட்டார்.

பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அவர் சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இவரை மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. இவர் விரைவில் உத்தரகாண்டின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார்.

Also Read  செல்லுக்கு செல் தாவும்…! மூளையை தாக்கும் "டெல்டா"…! அதிர்ச்சி ரிப்போர்ட்…!

புஷ்கர் சிங் தற்போது கதிமா தொகுதியில் இருந்து 2வது முறை எம்எல்ஏவாக தேர்வானவர். மேலும், உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் பகத் சிங் கோஷியாரிடம் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியவர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜய் மல்லையா திவாலானவராக அறிவித்தது லண்டன் ஐகோர்ட்..!

suma lekha

நீட் தேர்வை ஒத்திவைக்கும் திட்டம் இல்லை – மத்திய அரசு அதிரடி

suma lekha

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த விமானிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

Tamil Mint

இந்தியா: தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.17 லட்சமாக உயர்வு..!

Lekha Shree

ஆந்திரா: 19 வயது தலித் பெண் உயிருடன் எரித்து கொலை; குற்றவாளிகள் மீது காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யாவில்லை என புகார்

Tamil Mint

முதல் கட்டமாக அடுத்த இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல் படுத்துக – அன்புமணி ராமதாஸ்

Shanmugapriya

விவசாயிகள் பயங்கரவாதிகள் அல்ல, நாட்டிற்கு வளத்தை அளிப்பவர்கள்: ராகுல் காந்தி

Tamil Mint

நேற்று தேவாலயம்.. இன்று நெல்லையப்பர் கோயில்… தமிழகத்தில் மாஸ் காட்டும் ராகுல் காந்தி!

Shanmugapriya

கொரோனா பரவல் அதிகரிப்பு – மூன்று நகரங்களில் பொதுமுடக்கம் அறிவிப்பு!

Lekha Shree

20 இடங்களிலும் வெல்வோம்: எல்.முருகன் நம்பிக்கை

Devaraj

கும்பமேளாவில் பங்கேற்ற 1,701 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

Lekha Shree

மின்வெட்டும் திமுகவும்…! திருவிளையாடல் பட பாணியில் கலாய்த்த நத்தம் விஸ்வநாதன்!

sathya suganthi