கறுப்பின வீரர்கள் மீது இனவெறிப் பேச்சு… பிரிட்டன் பிரதமர் கண்டனம்..!


லண்டனில் நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் இத்தாலி அணியிடம் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது.

இந்த தோல்வியை பொறுத்துக்கொள்ள முடியாத இங்கிலாந்து ரசிகர்கள் சொந்த அணியில் உள்ள கறுப்பின வீரர்கள் மீது இனவெறியுடன் பேசினர்.

இது பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், இந்த இனவெறி பேச்சுக்கு பிரிட்டன் பிரதமர் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பீட்டர்சன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் நேற்று நடந்த யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.

Also Read  உலக பணக்காரர்களில் ஒருவருக்கு இந்த நிலைமையா…! அடிடாஸ் நிறுவன முன்னாள் உரிமையாளரை கட்டி வைத்து உதைத்த திருடர்கள்…!

இதில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தனர். அதனால், பெனால்டி ஷூட் முறை கடைபிடிக்கப்பட்டது.

இதில் இங்கிலாந்து அணியை 2-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது இத்தாலி அணி. இதன் மூலம் 50 ஆண்டுகளுக்குப் பின் கோப்பையை கைப்பற்றியது இத்தாலி அணி.

இந்த பெனால்டி ஷுட்டில் கோல் மிஸ் செய்த 3 வீரர்கள் (மார்கஸ் ராஷ்போர்ட், ஜாடன் சான்சோ, சாகர்) அனைவரும் கறுப்பின வீரர்கள்.

இதனால், இங்கிலாந்து அணியின் தோல்விக்கு இந்த மூன்று கறுப்பின வீரர்கள் தான் காரணம் என்று கூறி சமூகவலைதளத்தில் இங்கிலாந்து ரசிகர்கள் நிறவெறி மற்றும் இனவெறி கருத்துக்களை பதிவிட்டனர்.

Also Read  இனவெறிக்கு எதிராக இங்கிலாந்து ராணியை இழிவுப்படுத்தும் வகையில் கேலிச் சித்திரம்...! வலுக்கும் கண்டனம்...!

இதற்கு பலரும் கண்டம் தெரிவித்து வந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தனது ட்விட்டர் பதிவில், “எங்கள் காரில் நான் வீட்டுக்கு செல்லும்போது நான் பார்த்த காட்சிகள் மோசமானவை. வீரர்களை அவமானப்படுத்துவது யாருக்கு மகிழ்ச்சியைத் தரும்? உண்மையில் 2030ஆம் ஆண்டு உலகக் கோப்பையை நடத்த இங்கிலாந்துக்கு தகுதி இருக்கிறதா?” என பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த இனவெறி பேச்சுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “நமது ஹீரோக்கள் புகழ்வதற்கு தகுதியானவர்கள். நிறவெறியவுடன் சமூகவலைதளத்தில் விமர்சிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல.

Also Read  கொரோனா எதிரொலி…! இங்கிலாந்து அரண்மனையில் இந்த ஆண்டும் ரத்தான கொண்டாட்டம்...!

சமூகவலைதளத்தில் நிறவெறி கருத்துகளை பதிவிட்டவர்கள் கண்டிப்பாக தங்களைப் பார்த்து வெட்கப்பட வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

இவர்களை தொடர்ந்து கால்பந்து அமைப்பும் இங்கிலாந்து வீரர்கள் மீதான நிறவெறி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தொடர் முழுவதும் நிறவெறி தொடர்பான சர்ச்சைகள் எழுந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சக வீரரை அடித்து கொன்ற வழக்கு – மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது

sathya suganthi

அரச வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…! வைரலாகும் வீடியோ…!

sathya suganthi

சுழற்பந்து வீச்சை சமாளிக்கும் திறன் இந்த அணிக்கு இல்லை: சேப்பல் சாடல்!

Lekha Shree

மெட்ரோ ரயிலுடன் பாலம் உடைந்து விழுந்த காட்சி…! விபத்தில் 15 பேர் உயிரிழந்த பரிதாபம்…!

sathya suganthi

ஐசிசியின் கனவு அணியில் மூன்று விதமான போட்டிகளுக்கும் இந்திய வீரர்களே கேப்டன்!!

Tamil Mint

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி!

Lekha Shree

ஐபிஎல் தொடரில் இருந்து அடுத்தடுத்து விலகும் வீரர்கள்…! ரசிகர்கள் ஏமாற்றம்…!

Devaraj

அமெரிக்க அதிபரின் சம்பளம், வசதிகள் என்னென்ன?

Tamil Mint

அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றியின் விளிம்பின் ஜோ பைடன்

Tamil Mint

உலகம் முழுவதும் 13.72 கோடியைத் தாண்டிய கொரோனா பாதிப்பு…!

Devaraj

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது பாகிஸ்தான்…!

Lekha Shree

வவ்வாலிடம் இருந்து உருமாறியதா கொரோனா வைரஸ்…! ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Devaraj