a

கொரோனா அறிகுறியா? மருத்துவமனைக்கு செல்லாமல் ஸ்க்ரீனிங் சென்டருக்கு வாருங்கள் – ராதாகிருஷ்ணன்


கொரோனா அறிகுறி உள்ளவர்கள் பதற்றப்படாமல் ஸ்க்ரீனிங் சென்டருக்கு வரும்பட்சத்தில் தேவைப்பட்டால் மட்டுமே அங்கிருந்து மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை தண்டையார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை, பிரத்யேக வாகனங்களை அனுப்பி ஸ்க்ரீனிங் சென்டர்களுக்கு அழைத்து வருகிறோம் என்றும் அங்கு முழுமையான உடல் பரிசோதனைக்கு பிறகு நோயாளிகள் தரம் பிரிக்கப்படுவதாகவும் கூறினார்.

Also Read  திமுக சார்பில் பிரச்சார பயணம் தொடக்கம்

அதிக அளவில் தொற்று பாதிப்பு இல்லை என்றால் முழுமையான நோயுற்றவர்களுடன் மருத்துவமனைகளில் இருக்க வேண்டிய தேவை இல்லை என்றும் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

பல்ஸ் ஆக்சிமீட்டரில் ஆக்சிஜன் அளவு 90க்குக் கீழே இருந்தது என்றால் மற்ற சோதனைகள் இல்லாமல் ஸ்கீரினிங் சென்டர் வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார்கள் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Also Read  சென்னையில் இடியுடன் கொட்டித் தீர்த்த கனமழை…!

இதன் மூலம், சிகிச்சை தேவைப்படாத கொரோனா நோயாளிகள், மருத்துவமனைக்கு சென்று கூடுதலாக நோயைத் தேடிக்கொள்ளாமல் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த இரண்டு நாட்களில் கொரோனா தொற்று ஏறுமுகத்தின் வேகம் குறைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  "ரயில்களை வழக்கம் போல் இயக்க ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட முடியாது" - சென்னை உயர்நீதிமன்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் கோயில் குடமுழுக்குகளுக்கு அனுமதி

Tamil Mint

ஊட்டி, கொடைக்கானலில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

Tamil Mint

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி

Tamil Mint

தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் தவணை முறையில் கட்டணம் செலுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Tamil Mint

பிரிட்டனில் இருந்து விமானங்கள் மூலம் தமிழகத்திற்கு வந்தவர்கள் முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும் – தமிழக அரசு

Tamil Mint

மருத்துவக் கல்லூரி இட ஒதுக்கீடு யாருக்கு? முதல்வர் விளக்கம்

Tamil Mint

இன்று முதல் அக்னி நட்சத்திரம்…! மருத்துவர்கள் சொல்லும் அறிவுரை…!

sathya suganthi

திமுகவிலிருந்து மேலும் பலர் வெளியே வருவார்கள்: குட்டையைக் குழப்பும் கு க செல்வம்

Tamil Mint

திருவொற்றியூர் தொகுதி; களம் காணும் வேட்பாளர்கள் யார் யார்?

Lekha Shree

திமுக வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள மருத்துவர்கள் விவரம் இதோ…!

Devaraj

அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Tamil Mint

கொரோனா தொற்றால் காலமான தயாரிப்பாளர்

Tamil Mint