“திரைப்பட கருத்துக்களை திரையரங்குகளிலேயே விட்டுவிட வேண்டும்!” – நடிகர் ராதாரவி


சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘ஜெய்பீம்’ திரைப்படத்தின் சில காட்சிகளால் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், “திரைப்பட கருத்துகளை திரையரங்குகளிலேயே விட்டுவிட்டு வரவேண்டும்” என நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.

திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இயக்கியுள்ள ஆண்டி இந்தியன் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

Also Read  மறைந்த புனித் ராஜ்குமார் கண்கள் தானமாக வழங்கப்பட்டது!

இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, “திரைப்பட கருத்துக்களை திரையரங்குகளிலேயே விட்டுவிட்டு வீட்டிற்கு செல்ல வேண்டும்” என கூறினார்.

‘ஜெய் பீம்’ திரைப்படம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து, அதுகுறித்த விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் ராதாரவி ‘ஜெய்பீம்’ படத்தின் பெயரை குறிப்பிடாமல், “தற்போது ஒரு திரைப்படத்திற்கு பெரும் சர்ச்சை ஏற்பட்டு விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

Also Read  தல தோனியுடன் கால்பந்து பயிற்சி செய்யும் சினி செலப்பிரட்டி: இணையத்தை கலக்கும் போட்டோஸ்

ஆண்டி இந்தியன் திரைப்படம் வெளியாகும்போது அந்த திரைப்படத்தை பற்றி பேசுவார்கள், விமர்சிப்பார்கள். எனவே திரைப்பட கருத்துக்களை திரையரங்குகளிலேயே விட்டுவிட்டு வருவதே சிறந்தது.

ஆண்டி இந்தியன் திரைப்படத்திலும் பல சர்ச்சைகள் உள்ளது. இருந்தாலும் சிறந்த முறையில் இயக்குனர் அதை கையாண்டு உள்ளார்.

தற்போதைய சூழலில் உண்மை கதை என்று பெயர்களை மாற்றி மாற்றி எடுக்க கூடிய சம்பவங்கள் நடைபெற்று வருகின்ற. அதுபோல பல திரைப்படங்களை எடுக்க முடியும்.

இன்றைய சூழலில் ஓடிடியில் பல படங்கள் வெளியாகின்றன. 5 ஆண்டுகள் கழித்து நடிகர்களின் சம்பளத்தை ஓடிடி நிறுவனங்கள்தான் நிர்ணயிக்கப் போகின்றன” என பேசியுள்ளார்.

Also Read  பூர்ணாவிடம் திருமண மோசடி: நான்கு நபர்கள் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“Black Beauty..!” – Fablook இதழின் அட்டைப்படத்தில் மிளிரும் காஜல் அகர்வால்..!

Lekha Shree

அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் இவரா? வெளியான ‘தெறி’ அப்டேட்..!

Lekha Shree

என்ன பவி இதெல்லாம்?… பட்டுப்புடவையை பாதியாக வெட்டி.. வைரலுக்கு ஆசைப்பட்டு சர்ச்சையில் முடிந்த போட்டோஷூட்!

Jaya Thilagan

“குடும்பத்தில் 14 பேருக்கு கொரோனா” – மாஸ்டர் பட பிரபலம் உருக்கம்

Shanmugapriya

‘மிஸ் யூ சுஷாந்த்’ – டுவிட்டரில் உருகும் ரசிகர்கள்

sathya suganthi

ப்ளூ சட்டை மாறனின் ‘ஆண்டி இந்தியன்’ படத்திற்கு தடை- மாறனுக்கே ஆப்பா? ரசிகர்கள் கேலி…

Jaya Thilagan

3 ஆண்டுகள் கழித்து படம் இயக்கும் லிங்குசாமி! – யார் ஹீரோயின் தெரியுமா?

Lekha Shree

“என்னுடைய பயோபிக்கில் நீரஜ் சோப்ரா நடிக்கலாம்!” – அக்‌ஷய் குமார் கிண்டல்!

Lekha Shree

வேட்டைக்காரன் பட இயக்குனர் மரணம்

Tamil Mint

சூப்பர் ஸ்டார் பாடலை பாடி மனைவியை இம்பிரஸ் செய்த தனுஷ்! வைரல் வீடியோ இதோ!

Lekha Shree

சீரியல் பிரபலங்கள் பிரஜன்-சாண்ட்ரா இரட்டை குழந்தை பிறந்தநாள் கொண்டாட்டம்..வைரலாகும் வீடியோ

HariHara Suthan

போதைப் பொருள் வழக்கு: ரகுல் பிரீத், ராணா உட்பட 12 சினிமா பிரபலங்களுக்கு சம்மன்..!

suma lekha