‘வாத்தி கம்மிங் ஒத்து!’ – இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக டிராவிட் நியமனம்..!


இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ நேற்று அறிவித்துள்ளது.

டி20 உலகக்கோப்பை போட்டித் தொடர் முடிந்த பின் நியூசிலாந்து தொடரில் இருந்து 2023ம் ஆண்டு நடைபெறும் 50 ஓவர் உலக்கோப்பை போட்டி அவரை டிராவிட் இந்திய னியின் பயிற்சியாளராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள டிராவிடுக்கு ஊதியமாக இதுவரை எந்த பயிற்சியாளருக்கும் வழங்காத வகையில் ரூ. 10 கோடி வழக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சுலோச்சனா நாயக், ஆர்.பி. சிங் ஆகியோர் அடங்கிய இந்திய கிரிக்கெட்டின் ஆலோசனைக்குழு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்-ஐ நியமித்துள்ளது.

Also Read  பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியல் - கழற்றிவிடப்பட்டாரா நடராஜன்?

வரும் 17ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு பயிற்சியாளராக டிராவிட் பொறுப்பேற்பார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

47 வயதாகும் ராகுல் டிராவிட் இந்திய அணிக்காக விளையாடிய சிறந்த வீரர்களுள் ஒருவர் என்பதை மறுக்க முடியாது. இந்திய டெஸ்ட் அணியில் இந்திய அணியின் சுவர் என்று வர்ணிக்கப்படக் கூடியவர் ட்ராவிட் .

Also Read  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் - பார்வையாளர்களுக்கு அனுமதி?

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கும் இந்திய ஏ அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். அதன்பின் என்சிஏ இயக்குநராகவும் இருந்தார்.

தொடக்கத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் சம்மதிக்கவில்லை என்றும் தனது குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க முடியாது எனவும் கூறியதாக தெரிவித்ததாக தகவல்கள் வந்தன.

Also Read  இந்தி மொழி விவகாரம்: மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்ட Zomato..!

அதன்பின் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் சா இருவரும் திராவிட்-ஐ துபாய்க்கு வரவழைத்து அவரை சமாதானம் செய்து இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்க சம்மதிக்க வைத்ததாக கூறப்படுகிறது.

மேலும், டிராவிட் நியமனம் குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில், “ராகுல் டிராவிட் மிகச்சிறந்த வீரர். இந்திய கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் என்சிஏவில் ஏராளமான பங்களிப்பு செய்துள்ளார். இந்திய அணிக்கு பயிற்சியாளராக வந்தபின் இந்திய அணி புதிய உச்சத்தைத் தொடும் என நம்புகிறேன்” என கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

70 லட்சம் இந்தியர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்கள் டார்க் வெப்பில் அம்பலம்.!

Tamil Mint

ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

Tamil Mint

வாழ்த்து சொன்ன கனிமொழி எம்.பி.,! நன்றி சொன்ன மம்தா!

Lekha Shree

ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான தமிழக வீராங்கனைக்கு துணை முதல்வர் வாழ்த்து!

Lekha Shree

20 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தொடும் அபாயம்!

Tamil Mint

முதல் டெஸ்ட் போட்டி : 120 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறும் இந்தியா !!!

Tamil Mint

திரையரங்குகள், கல்லூரி திறக்க அனுமதி..! எங்கு தெரியுமா?

Lekha Shree

கம்பளா போட்டியில் இந்தியாவின் உசேன்போல்ட் சாதனை…!

Devaraj

“கொரோனா பூஸ்டர் டோஸுக்கு அவசியமில்லை!” – இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்

Lekha Shree

திணறும் கேரளா.. இன்று ஒரே நாளில் 41,971 பேருக்கு கொரோனா பாதிப்பு

Ramya Tamil

மொயின் அலியை படுமோசமாக விமர்சித்த தஸ்லிமா நஸ்ரின் – வலுக்கும் கண்டனங்கள்!!

Jaya Thilagan

கையில் குழந்தை… சூட்கேசில் மனைவியின் பிணம்… கணவரின் கொடூர கொலை!

Lekha Shree