a

ராஜஸ்தானில் இருந்து கழன்ற மற்றொரு வீரர் – நெருக்கடியில் சஞ்சு சாம்சன்!


ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை மூன்று போட்டிகளை எதிர்கொண்டு ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது.

அணியின் நட்சத்திர பட்டாளங்களாக திகழ்ந்த இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் முதல் ஆட்டத்தில் மட்டுமே விளையாடிய நிலையில் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி இங்கிலாந்து திரும்பினார்.

அவரை தொடர்ந்து வேகப் புயலான ஜோப்ரா ஆர்ச்சரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இரு பெரும் வீரர்கள் ராஜஸ்தான் அணியில் இருந்து விலகியது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

Also Read  பிஎல் போட்டியின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் எத்தனை கோடிக்கு விலைபோனது தெரியுமா?

இந்த நிலையில் தற்போது மற்றொரு இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விளக்கியுள்ளார்.

இதனை அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 27 வயதான இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் லியம் லிவிங்ஸ்டன் ஆறு மாதங்களாக பல்வேறு பயோ பபுல்களில் இருந்து வருகிறார்.

Also Read  3ம் நிலை வீரராக களமிறங்கி 10,000 ரன்களை குவித்து விராட் கோலி சாதனை!

தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்து அணியுடன் இணைந்த லிவிங்ஸ்டன் தொடர்ச்சியாக பிக் பாஷ் கிரிக்கெட் தொடரில் விளையாடி விட்டு இந்தியா வந்தார்.

இங்கு இந்தியா – இங்கிலாந்து இடையேயான ஒருநாள் போட்டியில் பங்கேற்ற அவர், அதனை முடித்த கையோடு ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சேர்ந்தார்.

Also Read  சன் ரைசர்ஸ் அணியை மிரட்டிய டிஆர்எஸ் எம்.எல்.ஏ..! காரணம் இதுதான்!

அடுத்தடுத்து 6 மாதங்கள் தொடர்ச்சியாக பயோ பபுலில் இருந்து வருவதால் கடுமையான சோர்வு காரணமாக லிவிங்ஸ்டன் நாடு திரும்புவதாக அறிவித்துள்ளார்.

முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜோஷ் ஹேசில்வுட், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வீரர் பிலிப்பே, ஹைதராபாத் வீரர் மிட்செல் மார்ஷ் ஆகியோர் பயோ பபுள் சோர்வு காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியா-இங்கிலாந்து இடையேயான ஒரு நாள் போட்டியில் சதம் அடிப்பாரா விராட் கோலி?

Lekha Shree

US மற்றும் ஃபிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் தொடர்: களமிறங்கத் துடிக்கும் ஆண்டி முர்ரே!

Tamil Mint

இந்திய அணி அதிரடி காட்டுமா?… அடிபணியுமா?…

Tamil Mint

இந்தியா-இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் போட்டி… சொதப்பிய இந்திய வீரர்கள் அசத்திய இங்கிலாந்து வீரர்கள்!

Tamil Mint

ஐபிஎல் முக்கியமா – சாகித் அப்ரிடி விமர்சனம்!

Jaya Thilagan

ஐதராபாத்க்கு வந்த சோதனை – சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற டெல்லி அணி!

Jaya Thilagan

சென்னை – மும்பை இன்று பலப்பரிட்சை!

Lekha Shree

ஐபிஎல் 2021: புதிய பெயருடன் களமிறங்க உள்ள அணி!

Tamil Mint

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது

Tamil Mint

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து ஜாம்பவான் மெக்ராத்தின் வளர்ப்பு பிரசித் கிருஷ்ணா…!

Lekha Shree

பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இன்று மோதல்!

Jaya Thilagan

உலகக் கோப்பை கால்பந்தில் நாங்க இல்லாம எப்படி? – ஜெர்மனி, இத்தாலி தகுதி சுற்றில் வெற்றி!

Lekha Shree