ராஜேந்திர பாலாஜி வழக்கு: “இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்?” – உச்சநீதிமன்றம் கேள்வி..!


அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று விசாரிக்கப்படும் நிலையில், போலீஸ் இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

Also Read  "30 நாட்களில் பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு" - டிஜிபி சைலேந்திர பாபு

அந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது வேறு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனை விசாரணைக்கு ஏற்க வேண்டும்” என வாதிடப்பட்டது.

இதைக்கேட்ட தலைமை நீதிபதி, “ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று விசாரிக்கப்படும் நிலையில் போலீஸ் இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்?

Also Read  விஜய் சேதுபதி மீதான அவதூறு வழக்கு - விசாரணையை ஒத்திவைத்த சென்னை உயர் நீதிமன்றம்…!

ராஜேந்திர பாலாஜி வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்களை எல்லாம் ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.

மேலும், முன்ஜாமீன் மனு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை வரும் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Also Read  தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? - டிசம்பர் 31-ம் தேதி ஆலோசனை…!

அதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய பலராமன், முத்துப்பாண்டி, பாபுராஜ் ஆகிய மூன்று பேரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தற்போது ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அணையில் வெடிவிபத்து, அச்சத்தில் மக்கள்

Tamil Mint

அண்ணாமலைக்கு புதுப்பெயரை சூட்டிய செந்தில் பாலாஜி.!

suma lekha

ஓ.பி.எஸ். தாயிடம் ஆசி பெற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…!

Devaraj

மு.க.ஸ்டாலின் கார் டயருக்கு கீழ் எலுமிச்சையா? – பகுத்தறிவு குறித்து கேள்வி எழுப்பிய நெட்டிசன்கள்…!

sathya suganthi

லிப்ட் கொடுப்பது போல் ஏமாற்றி பாலியல் தொல்லை கொடுத்த இருவர் கைது!

Lekha Shree

தமிழகம்: கல்லூரிகளில் 6 நாட்களுக்கு நேரடி வகுப்புகள் கட்டாயம்..!

Lekha Shree

திமுக கூட்டணியில் அதிக சீட் கேட்கிறதா காங்கிரஸ்? ராகுல் தமிழக வருகைக்கு காரணம் இதுதானா?

Tamil Mint

யப்பா சாமி வேலை செய்ய விடுங்க.! : வதந்தி பரப்பியவருக்கு வெங்கட் பிரபு நெத்தியடி பதில்.

mani maran

மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

suma lekha

கள்ளக்குறிச்சி எம்எல்ஏவின் மனைவி பரபரப்பு வீடியோ வெளியீடு

Tamil Mint

புதுச்சேரி சபாநாயகர் திடீர் உடல்நலக் குறை : உடல்நிலை குறித்த தற்போதைய நிலவரம்!

suma lekha

தேர்தல் பணிக்கு சென்ற ஆசிரியை உள்பட ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா…!

Devaraj