எங்கே வந்து விவாதம் நடத்துவது? ராஜேந்திர பாலாஜி சவால்


நாடாளுமன்ற உறுப்பினர் ஆன ஆ.ராஜா மற்றும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு இடையே கடுமையான வாங்குவதம் நடந்து கொண்டு இருக்கின்றது. இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராஜேந்திர பாலாஜி அவர் ” முதல்வர் பழனிசாமியை பற்றி பேச ராசாவிடம் என்ன தகுதி இருக்கிறது. 2ஜியில் ரூ.1.76 லட்சம் கோடி கொள்ளைப்போனது உண்மையா இல்லையா?. அதில் கொள்ளையடித்த முக்கால்வாசி பணத்தை பதுக்கி வைத்துள்ளதால் தான் ராசாவை ஸ்டாலின் கூடவே வைத்துள்ளார்.

Also Read  கட்சி கொடியுடன் பிக்பாஸில் கமல்

வருமானவரித்துறை பிரச்னை, அமலாக்கத்துறை பிரச்னை வரும் என்பதற்காக பதுக்கி வைத்துள்ளார். ஊழலின் மொத்த உருவமான கட்சி திமுக., அதிமுக தலைவி ஜெயலலிதா குறித்து பேச ஸ்டாலினுக்கோ, ராசாவுக்கோ, யாருக்கும் உரிமையில்லை. விவாதத்திற்கு முதல்வரை ஏன் கூப்பிடுகிறார், நான் வருகிறேன். எங்கே வந்து விவாதம் நடத்துவது? ஸ்டாலினிடம் கேட்கவா?, ராசாவிடம் கேட்கவா?.. ஊழல் பண்ணுகிறீர்களா இல்லையா?.

Also Read  அதிகரிக்கும் கொரோனா பரவல்.. இன்று முதல் அமலாகிறது தமிழக அரசின் கட்டுப்பாடுகள்!

சர்க்காரியா கமிஷனால் குற்றம்சாட்டப்பட்ட கட்சி தானே திமுக., விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்ததாக சர்க்காரியா கமிஷன் தீர்ப்பு வழங்கப்பட்ட கட்சி தானே திமுக. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி தானே திமுக., ஆட்சி. உண்மையா இல்லையா. பழனிசாமி அரசு மீதான பொறாமை காரணமாக எப்படியாவது மக்களிடம் பொய்யை சொல்லி ஆட்சியை அகற்றிவிடலாம் என்ற எண்ணத்தில் அவதூறுகளை வீசுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நீட் தேர்வு எழுதிய மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி..! தமிழகத்தில் மீண்டும் ஒரு சோக நிகழ்வு..!

Lekha Shree

சிங்கங்களுக்கு கொரோனா – எப்படி பரவியது?

Lekha Shree

கடலூரில் பயங்கர தீ விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

Lekha Shree

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை மெட்ரோ நிலையங்களில் ‘இது’ அறிமுகம்…!

Lekha Shree

“அகப்பட்டவன் மட்டும் அயோக்கியன் போல..!” – கே.டி.ராகவன் விவகாரம் குறித்து நடிகை கஸ்தூரி ட்வீட்..!

Lekha Shree

பாஜக மற்றும் அதிமுக கூட்டணியைத் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்.

Tamil Mint

தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை: பூங்கோதை பரபரப்பு அறிக்கை

Tamil Mint

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: தேசிய வானிலை மையம் எச்சரிக்கை

sathya suganthi

கனிமொழியின் கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் ஸ்டாலின்..! இலங்கைத் தமிழர்களுக்கான அறிவிப்புகள் வெளியீடு..!

Lekha Shree

உதயநிதி ஸ்டாலின் வருகின்ற தமிழக சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட உள்ளாரா?

Tamil Mint

நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.. கனிமொழி பேட்டி..

Ramya Tamil

எடப்பாடியில் டெபாசிட் வாங்க மாட்டார் இ.பி.எஸ் – ஸ்டாலின்!

Devaraj