ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு


ரஜினி கட்சி பெயர், இன்று டில்லியில் பதிவு செய்யப்பட உள்ளது. இதற்காக, வழக்கறிஞர்களுடன், மன்ற நிர்வாகிகள் சிலர், டில்லி சென்று உள்ளனர்.கொரோனாவால் முடங்கிய, ரஜினியின் அரசியல் பிரவேசம், தற்போது சூடுபிடித்துஉள்ளது.சென்னையில் சில நாட்களாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனமூர்த்தி, மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன், அவர் ஆலோசித்து வருகிறார்.

அதன் விளைவாக, கட்சிக்கு சில பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. அதில் ஒன்றை, ரஜினி தேர்வு செய்துள்ளார்.அந்த பெயரை, டில்லியில் உள்ள தேர்தல் கமிஷனில், இன்று பதிவு செய்ய உள்ளனர். இதற்காக, வழக்கறிஞர்களுடன், மன்ற நிர்வாகிகள் சிலர், டில்லி சென்றுள்ளனர். இதையடுத்து, கட்சி கொடி மற்றும் மாநில நிர்வாகிகளையும் தேர்வு செய்ய உள்ளனர். கட்சி கொடியில், வெள்ளை நிறம் பிரதானமாக இருக்கும் என்ற, தகவல் வெளியாகி உள்ளது.

Also Read  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சிக்கூட்டம்…!

இதற்கிடையே, கட்சி பெயரை அறிவித்த நாள் முதல், ஒவ்வொரு தெருவிலும், கட்சியின் பெயரை, மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல, வார்டு வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக, தனி குழுக்களும் உருவாக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், பணம், பதவிக்காக இருப்பவர்களை நீக்க, ரஜினி முடிவெடுத்துள்ளார். அதற்கான பட்டியலும் தயாராக உள்ளது.அதனால், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் நீக்கப்படலாம் என்ற, தகவல் வெளியாகி உள்ளது.சென்னை, போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டுக்கு, தற்போது போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.பாதுகாப்பு போலீசாருக்கு, தினமும் ரஜினி வீட்டில் இருந்தே, உணவு மற்றும் தேநீர் வழங்கப்படுகிறது.

Also Read  தமிழகத்தில் கொரோனாவின் ஏறுமுகம் தொடங்கியது! - விரைவில் ஊரடங்கிற்கு வாய்ப்பு?

மேலும், யார் யார் வருகின்றனர் என்பதை கண்காணிக்க, கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.ஜெ., மறைவுக்கு பின் களையிழந்த போயஸ் கார்டன், தற்போது ரஜினியால், மீண்டும் பரபரப்பாகி உள்ளது.ரஜினியின், 71வது பிறந்த நாளை முன்னிட்டு, நாளை அவரது ரசிகர்கள், யாகம், சிறப்பு பூஜை நடத்தவும், அன்னதானம் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.வடசென்னை ரஜினி மக்கள் மன்றம் சார்பில், இன்று காலடிப்பேட்டில் உதவிகள் வழங்கப்பட உள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிமுக-வில் இருந்து விரட்டப்படுவாரா இபிஎஸ்? சசிகலாவின் திட்டம் என்ன?

Lekha Shree

”திமுக ஆட்சிக்கு வந்தால் மணல் அள்ளலாம்” – செந்தில் பாலாஜி பேச்சால் சர்ச்சை! அதிமுக புகார்!

Lekha Shree

அம்மா உணவகத்தின் பெயர் பலகையை அடித்து நொறுக்கிய திமுகவினர்…!

Lekha Shree

மருத்துவமனையாக மாறுகிறது ‘லீ மெரீடியன்’ நட்சத்திர ஓட்டல்…!

Lekha Shree

முதலமைச்சர் பழனிசாமி இன்று டெல்லிக்கு பயணம்… இந்தப்பயணம் மாநில நலனுக்காகவா? அல்லது முதல்வர் வேட்பாளர் குறித்த முடிவா?

Tamil Mint

கோலாகலமாக தொடங்கிய காரமடை அரங்கநாதர் கோவில் கொடியேற்றம்!

Jaya Thilagan

20 ஆண்டுகளுக்குப் பிறகு உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கும் திமுக! எந்த தொகுதியில் தெரியுமா?

Lekha Shree

தமிழகத்தில், ஐந்து மாவட்டங்களில், 17 இடங்களில், இன்று(ஜன.,2) கொரோனா தொற்று தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெறும்

Tamil Mint

“கர்ணன்” திரைப்படம் குறித்து ஜோதிமணி எம்.பி. என்ன சொன்னார் தெரியுமா?

Devaraj

இவர்களுக்கு தான் அமைச்சர் பதவி.. ஸ்டாலின் முடிவால் அப்செட்டில் திமுக சீனியர்கள்..

Devaraj

தமிழகத்தில் வாக்குப்பதிவு நாளன்று பொதுவிடுமுறை அறிவிப்பு – தமிழக அரசு

Lekha Shree

தமிழகத்துக்கு ரூ 300 கோடி உடனே வேண்டும்: மோடியிடம் ஈபிஎஸ் கோரிக்கை

Tamil Mint