a

“கே.வி. ஆனந்துடன் படம் பண்ண நினைத்தேன்… மிஸ் பண்ணிவிட்டேன்!” – நடிகர் ரஜினியின் வைரல் வீடியோ!


பிரபல திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த், அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 54.

பத்திரிகைகளில் போட்டோகிராபராக பணியை தொடங்கி அயன், மாற்றான், கவண், காப்பான், கோ, அனேகன் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உருவெடுத்தார் கே.வி. ஆனந்த்.

இவரது மறைவு தமிழ் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரையுல பிரபலங்கள் பலர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தும் தனது ட்விட்டர் பக்கத்தில், “மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்” என பதிவிட்டுள்ளார்.

Also Read  வலிமையாக சைக்கிளிங் செய்யும் தல! வைரலாகும் புகைப்படம் இதோ..!

இதனிடையே காப்பான் பட விழாவில் பேசிய ரஜினிகாந்த், “சிவாஜி படத்தில் சஹானா பாடலை ஒளிப்பதிவு செய்வது கடினமான ஒன்று. அதை அவர் எப்படி ஒளிப்பதிவு செய்கிறார் என பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் வந்து பார்த்துவிட்டுச் சென்றார்கள்.

நானும் அவரும் ஒரு படம் பண்ண முயற்சித்தோம். ஆனால், அது முடியாமல் போனது. நான் அதை மிஸ் பண்ணிவிட்டேன்” என வருந்தி பேசிய வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

Also Read  ரைசா அனுப்பிய நோட்டீசுக்கு பதில் நோட்டீஸ்: பெண் மருத்துவர் அதிரடி!

இதேபோல் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கே.வி. ஆனந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “பத்திரிகைகளில் புகைப்பட கலைஞராக தன் வாழ்க்கையைத் தொடங்கிய கே.வி. ஆனந்த், தளராத தன் முனைப்பினால் தன்னை ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும் இயக்குனராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். அவரது மறைவு சினிமாவிற்கு பேரிழப்பு. அஞ்சலி” என தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விஷ்ணு விஷாலுக்கு மீண்டும் டும் டும் டும்

Tamil Mint

‘லிப்ட்’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடிய பாடல் வெளியானது…!

Lekha Shree

கபிலன், மாரியம்மா, ரங்கன் வாத்தியார் – வெளியானது ‘சார்பட்டா பரம்பரை’ கதாபாத்திரம்…

HariHara Suthan

வெள்ளித்திரையில் கால்பதிக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை…! இந்த ஹீரோ படத்திலா?

Lekha Shree

கோலிவுட்டின் பொங்கல் ஸ்பெஷல்!!

Tamil Mint

கிறங்கடிக்கும் அழகு…! ரம்யா பாண்டியனின் புதிய போட்டோ ஷூட்…!

Devaraj

நடிகை சித்ரா தற்கொலை வழக்கு – போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் கணவருக்கு நிபந்தனை ஜாமின்

Tamil Mint

விடுதலை படம் குறித்து ட்வீட் செய்த விஜய்சேதுபதி! கையில் துப்பாக்கியுடன் சூரி! சூப்பர் அப்டேட்!

Lekha Shree

கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி!

Tamil Mint

“ஒரு மென்மையான நேர்மையான மனிதர் காலமாகிவிட்டார்!” – நடிகர் தனுஷ் இரங்கல்

Lekha Shree

நடிகர் அருண் விஜய் வீட்டில் நடந்த சோகம்… தாமிராவை அடுத்து மற்றொரு பிரபலம் உயிரிழப்பு!

Lekha Shree

இயற்கை, பேராண்மை பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்

Devaraj