ரஜினியின் ‘அண்ணாத்த’ திரைப்படம் வெளிநாடுகளில் இத்தனை தியேட்டர்களில் வெளியாகிறதா?


‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் ரிலீஸ் மீதான எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது உலகளாவிய தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கும் அதிகரித்துள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் அண்ணாத்த. இப்படத்தில் மீனா, குஷ்பு. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர், டீசர், டிரெய்லர் என அனைத்தும் வெளியாகிவிட்டது.

Also Read  15M வியூஸ்களை கடந்த சந்தானத்தின் 'டிக்கிலோனா' பட டிரெய்லர்…!

மேலும், அண்ணாத்த படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளன.

தீபாவளி வெளியீடாக நவம்பர் 4ஆம் தேதி 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்கில் நேரடியாக வெளியாகவிருக்கும் அண்ணாத்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் ஓவர்சீஸ் எனப்படும் வெளிநாடு திரையரங்கு வெளியீட்டு உரிமத்தை கியூப் டிஜிட்டல் சினிமா புரொவைடர் கைப்பற்றியுள்ளது.

இந்த நிறுவனம் அண்ணாத்த படத்தை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஸ்ரீலங்கா, நியூசிலாந்து, கனடா, middle-east, ஐரோப்பா, மலேசியா, வடக்கு அயர்லாந்து, சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ரிலீஸ் செய்கிறது.

Also Read  ஆஸ்கர் : அதிக விருதுகளை வென்ற 5 திரைப்படங்கள்…!

குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் சுமார் 500 திரையரங்குகளில் அண்ணாத்த படம் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது. பிரான்சிலும் முதல் முறையாக அதிக திரையரங்குகளில் இப்படம் ரிலீசாகிறது.

மேலும், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய திரையரங்கமான The Panasonic Imax உட்பட ஆஸ்திரேலியாவில் 60க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், கனடாவில் 14 திரையரங்குகளிலும், மலேசியாவில் 500 திரையரங்குகளிலும், Middle-East-ல் 80 திரையரங்குகளிலும், வடக்கு அயர்லாந்து மற்றும் சிங்கப்பூரில் சுமார் 20 திரையரங்குகளிலும், ஸ்ரீலங்காவில் 50 திரையரங்குகளிலும், இங்கிலாந்து 30 திரை அரங்குகளிலும் அண்ணாத்த படம் வெளியாகிறது.

Also Read  "மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் இறுதிச்சடங்குகள் நாளை நடைபெறும்" - கர்நாடகா முதல்வர்

இதன்மூலம் உலகிலேயே அதிக திரையரங்குகளில் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகும் திரைப்படமாக அண்ணாத்த படம் உருவெடுத்துள்ளது.

மேலும், கொரோனாவிற்கு பிறகு வெளிநாடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் முதல் படம் என்ற சாதனையும் படைத்துள்ளது.

வெளிநாடுகளில் நிலவும் இந்த நெருக்கடியான நிலையிலும் கிட்டத்தட்ட 1100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரஜினியின் அண்ணாத்த ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளிக்கின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக்பாஸ் வீட்டிலிருந்து முதலில் வெளியேறப்போவது இவரா?

Lekha Shree

பயங்கர கார் விபத்து : நடிகை யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் அனுமதி.!

suma lekha

“இது மனித நாகரிகத்தின் உச்சம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வாழ்த்திய பிரபல இயக்குனர்!

Lekha Shree

தளபதியின் 65 ஆவது படத்தை இயக்குகிறார் நெல்சன் திலீப்குமார்

Tamil Mint

நிச்சயத்துக்கு பின் திருமணத்தை நிறுத்திய தனுஸ் பட நாயகி…! காரணம் இதுதான்…!

sathya suganthi

நீண்ட இடைவெளிக்கு பிறகு கிருத்திகா உதயநிதி இயக்கும் படம் – இவர் தான் ஹீரோ…!

sathya suganthi

தமிழ் சினிமாவின் பிரபல இளம் நடிகருக்கு கொரோனா…! அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

Devaraj

டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் ஷ்ரேயாஸ் ஐயரின் ‘வாத்தி கம்மிங்’ டான்ஸ் இணையத்தில் வைரல்..!

Lekha Shree

இயக்குனர் ஷங்கரின் மருமகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு..!

Lekha Shree

அற்புதத்தை காணச் சென்ற கவிஞர் பிரான்சிஸ் கிருபா..!

suma lekha

பிக்பாஸ் 5வது சீசன் எப்போது ஆரம்பமாகும்?

Lekha Shree

‘பிக் பாஸ்’ கவினின் ‘லிப்ட்’ படம் குறித்த முக்கிய அப்டேட்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

Lekha Shree