“அண்ணாத்த இன்னொரு திருப்பாச்சியா?” – இணையத்தில் வைரலாகும் மீம்..!


ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. கொட்டும் மழையிலும் ரசிகர்கள் அதிகாலை முதலே படத்தை பார்க்க குவிந்து வருகின்றனர்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் அண்ணாத்த. இப்படத்தில் மீனா, குஷ்பு. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

தீபாவளி வெளியீடாக இன்று 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்கில் நேரடியாக வெளியாகி உள்ளது அண்ணாத்த படம்.

Also Read  'ஜெய் பீம்' சர்ச்சை - சூர்யாவுக்கு ஆதரவு குரல் கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன்..!

கொரோனாவிற்கு பிறகு வெளிநாடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் முதல் படம் என்ற சாதனையும் படைத்துள்ளது இப்படம்.

இதனால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது. ஆனால், இப்படம் குறித்து இணையத்தில் நெட்டிசன்கள் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அப்படி சிலர், “அண்ணாத்த படம் இன்னொரு திருப்பாச்சி” என மீம் பதிவிட்டு வருகின்றனர். அப்படி அவர்கள் கூறுவதற்கு சில எடுத்துக்காட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

அதில், விஜய் நடித்த திருப்பாச்சி கிராமத்தில் வாழும் அண்ணன்-தங்கை செண்டிமெண்ட் படம். அதேபோல ரஜினியின் அண்ணாத்த படமும் கிராமத்தில் வாழும் அண்ணன்-தங்கை செண்டிமெண்ட் கதைதானாம்.

Also Read  "Biggboss game begins…!" - பிக்பாஸ் வீட்டில் சண்டை ஆரம்பம்..! வெளியான ப்ரோமோ..!

அடுத்து திருப்பாச்சி படத்திலும் தங்கைக்கு விஜய் மாப்பிள்ளை பார்ப்பார். அதேபோல அண்ணாத்த படத்திலும் கீர்த்தி சுரேஷுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார் ரஜினி.

திருப்பாச்சியில் சென்னையில் வசிக்கும் தங்கை கணவருக்கும் அங்குள்ள ரௌடிக்கும் பிரச்னை ஏற்படும். அதேபோல அண்ணாத்த படத்திலும் கொல்கத்தாவில் வசிக்கும் தங்கையின் கணவருக்கும் அங்குள்ள ரௌடிகளுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது.

Also Read  சிவகார்த்திகேயனின் தந்தை கொல்லப்பட்டாரா? - எச்.ராஜா பேச்சால் பரபரப்பு!

திருப்பாச்சியில் தங்கையின் மகிழ்ச்சியான வாழ்வுக்காக அந்த ரௌடிகளை துவம்சம் செய்வார் விஜய். அதேபோல் அண்ணாத்த படத்திலும் தங்கையின் மகிழ்ச்சியான வாழ்வுக்காக அந்த ரௌடிகளை துவம்சம் செய்கிறார் ரஜினி.

இந்த பாயிண்ட்ஸ்களை முன்வைத்து பல நெட்டிசன்கள் “அண்ணாத்த இன்னொரு திருப்பாச்சி” என கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

ஆனால், ஒரு வேற்றுமையும் உள்ளதாம். அதாவது திருப்பாச்சியில் விஜய் தான் தங்கைக்கு திருமணம் செய்து வைப்பார். ஆனால், அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் தன் அண்ணன் ரஜினிக்கு தெரியாமல் தான் காதலித்தவரை திருமணம் செய்துகொண்டு கொல்கத்தாவிற்கு செல்கிறாராம்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“கதாப்பாத்திரங்களின் வலிமையை உணர்ந்து நடிப்பவர்” – விஜய் சேதுபதியை புகழ்ந்த சிரஞ்சீவி

Tamil Mint

சூர்யாவிடம் நஷ்டஈடு கேட்ட விவகாரம்..! ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #பணம்பறிக்கும்_பாமக ..!

Lekha Shree

திரைப்படங்களில் நடிப்பதற்கு முன் ரஷ்மிகா மந்தனா! பலரும் பார்த்திராத கியூட் வீடியோ இதோ..

Jaya Thilagan

சிறப்பு அங்கீகாரத்திற்கு தேர்வான ஜோதிகாவின் பிரபல திரைப்படம்..!

Lekha Shree

ஆர்யன் கான் விவகாரத்தில் பாஜக சூழ்ச்சி? வீடியோ வெளியிட்ட அமைச்சர்..!

Lekha Shree

‘சபாபதி’ படத்தின் விளம்பர போஸ்டரால் சர்ச்சையில் சிக்கிய சந்தானம்..!

Lekha Shree

சார்பட்டா படத்தின் புதிய அப்டேட்..!இயக்குனர் பா.ரஞ்சித் அறிவிப்பு…

HariHara Suthan

கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி!

Tamil Mint

‘அண்ணாத்த திருவிழா ஆரம்பம்!’ – ரஜினியின் ‘அண்ணாத்த’ பர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு..!

Lekha Shree

விஜய்- அஜித் ஓவியங்களை வரைந்து அசத்திய பொன்வண்ணன்! வைரல் புகைப்படங்கள் இதோ!

Lekha Shree

அபிஷேக் காலில் விழுந்த தாமரைச்செல்வி..! எதற்காக தெரியுமா?

Lekha Shree

நடிகர் விஷால் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீது பரபரப்பு புகார்..!

Lekha Shree