“என் கண்ணுக்கு முன்னால வளர்ந்த குழந்தை!” – புனித் ராஜ்குமார் குறித்து ரஜினிகாந்த் உருக்கம்..!


கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் 46 வயதில் காலமானது கன்னட திரையுலகை மட்டுமல்ல இந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கடந்த மாதம் 29ம் தேதி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென்று புனித் ராஜ்குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

Also Read  பார்த்திபன், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோரின் படங்களுக்கு மத்திய அரசின் விருதுகள் அறிவிப்பு

ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய உடல் பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவர் மறைவுக்கு பிரதமர் மோடி உட்பட அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அவரது சமாதிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் புனித் ராஜ்குமார் இறப்பிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். ஹூட் செயலியில் அவர், “அனைவருக்கும் வணக்கம். எனக்கு சிகிச்சை முடிந்து நல்ல குணம் ஆகிட்டு வர்ரேன். நான் ஹாஸ்பிடல்ல இருக்கும்போது புனித் ராஜ்குமார் அகாலமரணமடைந்து இருக்காங்க.

Also Read  'தளபதி' விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த சீரியல் நடிகர்…! வைரல் போட்டோ இதோ..!

அந்த விஷயத்தை எனக்கு ரெண்டு நாள் கழிச்சு தான் சொன்னாங்க. அதை கேட்டு நான் ரொம்ப ரொம்ப வேதனைப்பட்டேன். மனசு ரொம்ப கஷ்டமா இருந்தது.

என் கண்ணுக்கு முன்னால வளர்ந்த குழந்தை. திறமை, அன்பும் பண்பும் கொண்ட அருமையான குழந்தை. பேரும் புகழும் உச்சியில் இருக்கும் போதே இவ்வளவு சின்ன வயசிலேயே நம்மை விட்டு மறைந்து இருக்காங்க.

Also Read  வெற்றிமாறன்-ராகவா லாரன்ஸ் இணையும் படத்தின் டைட்டில் இதுதான்!

அவருடைய இழப்பு கன்னட சினிமாவில் ஈடுகட்டவே முடியாது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல எனக்கு வார்த்தைகளே இல்லை. புனித் ராஜ்குமார் ஆத்மா சாந்தி அடையட்டும். நன்றி” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘தாண்டவ்’ குழுவினரின் நாக்கை அறுப்பவர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசு! பகிரங்க அறிவிப்பால் பாலிவுட்டில் பரபரப்பு!

Tamil Mint

“ஒரு மென்மையான நேர்மையான மனிதர் காலமாகிவிட்டார்!” – நடிகர் தனுஷ் இரங்கல்

Lekha Shree

“விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டது” -எஸ்.ஏ.சந்திரசேகர்

Lekha Shree

கண்மணி அன்போடு காதலன் .. நயன்வுடன் விக்னேஷ் சிவன்!!!

suma lekha

அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி… திடீர் அறுவை சிகிச்சைக்கு திட்டம்…!

HariHara Suthan

வைரமுத்து-சின்மயி விவகாரம் – மனம் திறந்த மதன் கார்க்கி..!

Lekha Shree

ரஜினியை அடுத்து ‘Man Vs Wild’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகும் பிரபல நடிகர்..! யார் தெரியுமா?

Lekha Shree

“சூரரைப் போற்று படத்தில் சூர்யா சிறப்பாக நடித்துள்ளார்” – ரஹானே புகழாரம்

Tamil Mint

நடிகை ஐஸ்வர்யா மேனனின் கலக்கல் கடற்கரை போட்டோஷூட்..!

Jaya Thilagan

“பஜ்ஜி ஹாப்பி அண்ணாச்சி!” – விஜய் சேதுபதிக்கு அவரது ஸ்டைலிலேயே நன்றி சொன்ன ஹர்பாஜன் சிங்..!

Lekha Shree

சினிமாவில் 43 ஆண்டுகள் நிறைவுசெய்த ராதிகா… கேக் வெட்டி கொண்டாட்டம்…!

suma lekha

பட வாய்ப்பு இல்லை..அதிக கடன் – சொந்த வீட்டை விற்கும் பிரபல காமெடி நடிகர்..!

HariHara Suthan