மாற்று திறனாளி பெண்ணுக்கு நடிகர் ரஜினிகாந்த் உதவி: ரசிகர்கள் நெகிழ்ச்சி


நடிகர் ரஜினிகாந்த் இயல்பிலேயே கருணை உள்ளம் கொண்டவர். சத்தமில்லாமல் பல உதவிகளை செய்து வருபவர். 

உதவி கேட்டு வந்த ஒரு மாற்று திறனாளி பெண்ணுக்கு நடிகர் ரஜினிகாந்த் உதவி கரம் நீட்டிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து சில தினங்களாகவே செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், அவரது ரசிகர்கள் நிறைய பேர் ரஜினி வீட்டு வாசலில் திரண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

ரஜினி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் பலர் ஆவலோடு அவர் போஸ் கார்டன் இல்லத்தின் முன் காத்திருக்கின்றனர். 

Also Read  இன்று தொடங்கியது சென்னை புத்தக கண்காட்சி - உற்சாகத்தில் புத்தக பிரியர்கள்!

அந்த ரசிகர்கள் கூட்டத்தின் மத்தியில் இந்த மாற்று திறனாளி பெண்ணும் நின்றிருந்தார். 

அவரது பெயர் கெளரி ராமையா, திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர். சமீப காலமாக எந்த வேலையும் இல்லாமல் இந்த பெண் அவதிப்பட்டு வந்துள்ளார். 

Also Read  சட்டமன்றத்தில் திமுகவுக்கு எதிராக புயலைக் கிளப்பப் போகும் கு க செல்வம்?

மேலும் அவரது கணவர் ஆஸ்துமா நோயாளி. அதனால் வேலைக்கு செல்லாமல் இருக்கிறார் மற்றும் இவருக்கு 2 பிள்ளைகள் இருக்கின்றனர் என தெரியவந்துள்ளது. 

தன் பிள்ளைகளின் படிப்பிற்காக கைப்பேசி வாங்குவதற்கு கூட பணம் இல்லாமல் இருந்துள்ளார். மேலும் தனக்கு அரசு தந்திருந்த மாற்றுத்திறனாளி 3 சக்கர சைக்கிளும் பழுதாகி விட்டதால், எங்குமே செல்ல முடியாமலும் அவதிப்பட்டுள்ளார். 

அப்போது, சென்னைக்கு சென்று தலைவர்கள் யாரையாவது சந்தித்து உதவி கேட்கலாம் என்று வந்தபோதுதான், ரஜினியை சந்தித்து உதவி கேட்க நினைத்துள்ளார். அதனால், அவரது இல்லத்தின் முன் காத்திருந்திருக்கிறார். 

இந்த செய்தி நடிகர் ரஜினிகாந்த் காதுக்கு எட்டி உள்ளது. உடனடியாக தன்னுடைய உதவியாளர் மூலம் மாற்று திறனாளி பெண்ணுக்கு நிதியுதவி அளித்துள்ளார். 

Also Read  தி.மு.க மீதும் என் மீதும் வீண் பழிபோடுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி: மு.க.ஸ்டாலின்

மேலும் இவரின் பிள்ளைகளின்  படிப்பு செலவையும் ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகும் “லாபம்”: ரசிகர்கள் மகிழ்ச்சி.!

mani maran

எந்த தவறும் செய்யாத நான் விசாரணை ஆணையை எதிர்கொள்ள தயார்: அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா

Tamil Mint

செந்தில் பாலாஜிக்கு செக்: கொதித்தெழுந்த திமுக சீனியர்ஸ்.!

mani maran

கன்னியாகுமரியின் அடுத்த எம்பி யார்? சூடுபிடிக்கும் அரசியல் சதுரங்கம்

Tamil Mint

“சசிகலாவின் உயிருக்கு ஆபத்து” – சசிகலாவின் தம்பி திவாகரன் அச்சம்!

Tamil Mint

தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப்படாது: அமைச்சர் திட்டவட்டம்

Tamil Mint

தமிழகத்தில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

மச்சானுக்கு மகிழ்ச்சியான செய்தி: நமிதாவுக்கு பாஜகவில் புது பதவி

Tamil Mint

மத்திய குழுவினர் தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆய்வு

Tamil Mint

தெலுங்கிலும் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்…!

Jaya Thilagan

பிரியாவிடை பெற்ற பன்வாரிலால் புரோஹித்.!

suma lekha

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி நடிகை சாந்தினி மீது பரபரப்பு புகார்…!

Lekha Shree