“தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்” – நடிகர் ரஜினிகாந்த்


“ஜனவரியில் அரசியல் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு” என நடிகர் ரஜினிகாந்த் அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகு தனது போயஸ் கார்டன் இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

“என் ரசிகர்களுக்காக என் உயிரே போனாலும் கவலையில்லை.கொடுத்த வாக்கில் இருந்து நான் என்றைக்கும் மாறமாட்டேன். டிசம்பர் 2017-இல் அரசியலுக்கு வருவது உறுதி என கூறியிருந்தேன். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது. தேர்தலில் தோல்வி அடைந்தாலும் அது மக்களின் தோல்வியாகவே இருக்கும். தேர்தலில் நான் வென்றாலும் அது மக்களுக்கான வெற்றியாகவே இருக்கும்.

Also Read  ரஜினி கட்சியின் பெயரும், சின்னமும் இதுவா?

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் சுற்றுப்பயணம் செய்வது ஆபத்து என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என களம் இறங்கி உள்ளேன். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றுவோம். சிறுநீரக் மாற்று அறுவைச் சிகிச்சை செய்துள்ளதாலும் கொரோனா காலம் என்பதால் நோய்த் தொற்று அபாயம் இருப்பதாலும், தமிழகத்தில் நான் சுற்றுப்பயணம் செய்ய மாட்டேன்” எனத் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர் “ஜாதி, மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாக்குவது நிச்சயம். அற்புதம் அதிசயம் நிகழும். அண்ணாத்த படத்தை முடித்து தர வேண்டியது என் கடமை” எனவும் அவர் கூறினார்.

Also Read  தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 - இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு!

“ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்கள் இல்லாத சூழலில் ரஜினி அரசியலுக்கு வருவது பொருத்தமான தருணம்” என ஆடிட்டர் குருமூர்த்தி கூறினார். 

ரஜினி மக்கள் மன்றத்தின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன் மூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Also Read  மொபைல் மூலம் இ-பாஸ் பெறுவது எப்படி?முழு விவரம் இதோ!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

sathya suganthi

நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு: கொரோனா இருந்து மீண்ட அமைச்சரின் அதிரடி

Tamil Mint

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,893 பேருக்கு கொரோனா உறுதி : முழு விவரம் இதோ.!

suma lekha

பாலியல் வன்கொடுமை வழக்கு: விமான படை அதிகாரியை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி!

Lekha Shree

PSBBயை அடுத்து மகரிஷி வித்யா மந்திர் : பாலியல் புகாரில் மேலும் ஒரு ஆசிரியர் சஸ்பெண்ட்

sathya suganthi

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்.

Tamil Mint

தமிழகம்: 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!

Lekha Shree

மழைக்கு வாய்ப்பு : இந்த 5 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை…!

sathya suganthi

ஔவையார், பாரதியார் பாடல்களை மேற்கோள் காட்டி பேசிய மோடி!

Tamil Mint

சேலம் 8 வழிச்சாலை வழக்கில் நாளை தீர்ப்பு.!

Tamil Mint

சீமானின் ஆண்டு வருமானம் ரூ.1000? எழுத்துப்பிழை என நா.த.க. விளக்கம்

Devaraj

கோயில் சொத்து விவரங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும் – அமைச்சர் அதிரடி உத்தரவு

sathya suganthi