நடிகர் ரஜினி விரைவில் குணம் பெற தெலுங்கு நடிகர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்


ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினிகாந்த  அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியானது  இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ரஜினிகாந்த் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 10 நாட்களாக ஐதராபாத்தில் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டிருந்தார். படப்பிடிப்புத் தளத்தில் ஒரு சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

22-ம் தேதி ரஜினிகாந்துக்கும் பரிசோதனை செய்யப்பட்டு அவருக்குத் தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. அன்றிலிருந்து அவர் தனிமையில் தான் இருக்கிறார். தொடர்ந்து அவரது உடல்நலனும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அவருக்குக் கொரோனா அறிகுறிகள் இல்லையென்றாலும் அவரது ரத்த அழுத்த அளவு கடுமையாக ஏறி இறங்கி வருகிறது. மேற்கொண்டு அதற்கான பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது இரத்த அழுத்தம் சீராகி, அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் வரை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு அவருக்குச் சிகிச்சை தரப்படும்.

Also Read  குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா 3-வது அலை - பெற்றோர்களே உஷார்…!

ரத்த அழுத்த அளவில் மாறுபாடு  மற்றும் உடல் சோர்வைத் தாண்டி அவருக்கு வேறெந்த பிரச்சினைகளும் இல்லை. அவரது இதயத் துடிப்பு, இரத்த ஓட்டம் ஆகியவை சீராக இருக்கின்றன என தெரிவித்துள்ளது.

ஐதராபாத் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றுவரும் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து தொலைபேசியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விசாரித்தார்.நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்  கேட்டறிந்தார். சகோதரர் ரஜினிகாந்த் விரைவில் பூரண நலம் பெற  பிரார்த்திக்கிறேன் என கூறினார்.

Also Read  லக்கிம்பூர் வன்முறை - பா.ஜ.க.வைச் சேர்ந்த நடிகை குஷ்பு கடும் கண்டனம்…!

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரப்பாபு நாயுடு நடிகர் ரஜினிகாந்த்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியறிந்து கவலை அடைந்தேன்,ரஜினிகாந்த்  விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என கூறி உள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை..!

Lekha Shree

பாலிதீன் கவரால் முகத்தை மூடி தற்கொலை முயற்சி – பரபரப்பை ஏற்படுத்திய பாமக எம்எல்ஏ

sathya suganthi

தமிழகத்தில் ஒரேநாளில் 1,908 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

suma lekha

கூட்டணி தான் ம.நீ.ம. தோல்விக்கு காரணம்…! பொன்ராஜ் விளக்கம்

sathya suganthi

சென்னையில் அத்தியாவசிய சேவையில் இருப்போருக்கு மட்டும் அக்.5 முதல் புறநகர் ரயில் சேவை’

Tamil Mint

காதலர் தினத்தன்று சென்னைக்கு வரும் பிரதமர் மோடி! பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை!

Tamil Mint

“நாம் தமிழர் கட்சியும், மக்கள் நீதி மய்யமும் இணைந்தால் மாபெரும் சக்தியாக உருவாகும்” – கருணாஸ்

Lekha Shree

மாணவர்களுக்கு ஆங்கிலம் பயில நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஷ்..!

suma lekha

டெல்டா பிளஸ் வகை வைரஸால் தமிழகத்தில் ஒருவர் பாதிப்பு!

Lekha Shree

தமிழகம்: மாவட்ட நீதிபதி தேர்வில் 6 பேர் மட்டும் தேர்ச்சி!

Tamil Mint

தமிழக தேர்தலில் மாஸ் காட்டிய பெண்கள்! முழு விவரம் இதோ!

Lekha Shree

புதுச்சேரியில் கஞ்சாவுக்காக போதை ஊசி விற்ற ஜிப்மர் மருத்துவர் கைது!

Tamil Mint