நடிகர் ரஜினியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: அப்போலோ மருத்துவமனை நிர்வாகம்


நடிகர் ரஜினிகாந்தின் டிஸ்சார்ஜ் குறித்து இன்று மாலை முடிவெடுக்கப்படும் என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட ரஜினிகாந்திற்கு கடந்த 22ம் தேதி பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் அன்று முதல் அவர் தனிமையில் இருந்து வந்தார். தொடர்ந்து அவரது உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

Also Read  இணையத்தில் ட்ரெண்டாகும் சிவகார்த்திகேயனின் ‘டான்’ புகைப்படங்கள்.!

இந்நிலையில் ரஜினிகாந்துக்கு ரத்த அழுத்தம் சீராக இல்லாமல் இருந்ததால் மருத்துவ பரிசோதனைகள் நடத்துவதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து அப்போலோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் ரஜினியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் உள்ளது. மருத்துவப் பரிசோதனைகளில் கவலைப்படும் வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை. நடிகர் ரஜினியின் ரத்த அழுத்தம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Also Read  தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி!!

முழு ஒய்வு எடுக்க ரஜினிகாந்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. ரத்த அழுத்தம் நேற்றைவிட கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும் ரத்த அழுத்தத்தின் அளவு அதிகமாகவே உள்ளது. பரிசோதனை முடிவுகள், ரத்த அழுத்தக் கட்டுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் டிஸ்சார்ஜ் செய்வது குறித்து மாலையில் முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சட்டமன்றத்திற்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரம்:

Tamil Mint

வீடுதோறும் வாஷிங்மிஷின் வழங்க அரசிடம் எங்கு பணம் உள்ளது? – சீமான்

Devaraj

20 இடங்களிலும் வெல்வோம்: எல்.முருகன் நம்பிக்கை

Devaraj

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிருக்கு பதிலாக இனி இவரா?… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

Tamil Mint

ராஜா ராணி சீரியல் நடிகையின் கர்ப்பகால போட்டோ சூட் – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்…!

Devaraj

தமிழ்நாடு: கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய தடை இல்லை…!

Lekha Shree

மீண்டும் இணையும் ஆர்யா மற்றும் ‘டெடி’ பட இயக்குனர்! டெடி 2ம் பாகம் உருவாகிறதா?

Lekha Shree

மணிரத்தினத்தின் அடுத்த அந்தலாஜி திரைப்படம் நெட்பிளிக்ஸ்யில் வெளியாகப்போகின்றது

Tamil Mint

அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுக்கும் மாற்று வேண்டும் – மயில்சாமி பேட்டி

HariHara Suthan

‘யாருப்பா அந்த பெயிண்டர்’ மீம்ஸ்… வைரலான பின் தெரியவந்த உண்மை நிலவரம்..!

Lekha Shree

நான் விஜய் பினாமியா? மனம் திறக்கும் தயாரிப்பாளர்

Tamil Mint

ரைசா அனுப்பிய நோட்டீசுக்கு பதில் நோட்டீஸ்: பெண் மருத்துவர் அதிரடி!

Lekha Shree