மகள் செளந்தர்யா ரஜினிகாந்தின் ‘Hoote’ செயலியை துவக்கி வைத்த நடிகர் ரஜினிகாந்த்..!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது மகள் சவுந்தர்யாவின் குரல் சார்ந்த செயலியான hoote-வை அறிமுகப்படுத்தியுள்ளார்.

நேற்று ரஜினிகாந்த் தனது அறிக்கையில், “இரண்டு காரணங்களுக்காக அக்டோபர் 25 எனது வாழ்க்கையில் ஒரு சிறப்பான நாளாக இருக்கும்.

Also Read  ரஜினி படத்தில் கமல்: லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் பிளான்

முதலாவது காரணம் நான் தாதா சாகேப் பால்கே விருதைப் பெறப்போவது. மற்றொன்று எனது மகள் சவுந்தர்யா அக்டோபர் 25 அன்று ஒரு புதிய சமூக ஊடக தளத்தை தொடங்க உள்ளார்” என குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல் இன்று தனது மகள் சவுந்தர்யாவின் குரல் சார்ந்த செயலியான hoote-வை ரஜினிகாந்த் அறிமுகப்படுத்தியுள்ளார்.

Also Read  சொகுசு கார் வாங்கிய 'பிக்பாஸ்' ஷிவானி! - விலையை கேட்டு ரசிகர்கள் ஷாக்..!

இதுகுறித்து சவுந்தர்யா ரஜினிகாந்த் கூறுகையில், “என் அப்பாவுக்கு தமிழ் எழுத வராது. முன்பு அவர் கட்சி தொடங்குவது சார்ந்த ட்வீட் போடுவதற்கு எனக்கு வாய்ஸ் நோட் அனுப்புவார். அப்போது பிறந்த யோசனை தான் Hoote செயலி.

என் அப்பாவுக்கு தமிழ் நன்றாக படிக்க தெரியும்; ஆனால் எழுதத் தெரியாது. அப்பாவிடம் கலந்து ஆலோசித்த பிறகு தான் இதை கூறியுள்ளேன்.

Also Read  சிவகார்த்திகேயனின் 'டான்' படக்குழு மீது வழக்கு! காரணம் இதுதான்..!

அவருக்கு தமிழ் எழுதத் தெரியாது என்பதால் அவர் மீது தமிழ்நாடு மக்கள் வைத்துள்ள அன்பு குறையப் போவது இல்லை” என தெரிவித்துள்ளார்.

இந்த செயலியின் முதல் பதிவில் ரஜினிகாந்த் தனது மகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தான் பெற்ற தாதா சாகேப் பால்கே விருதை தனது குருநாதர் கே.பாலச்சந்தர், அண்ணன் சத்யநாராயணன் மற்றும் நண்பர், பேருந்து ஓட்டுநர் ராஜ் பகதூர் ஆகியோருக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாபநாசம் 2 உருவாவது சாத்தியமா? கமல்ஹாசன் ரியாக்‌ஷன் என்ன?

Jaya Thilagan

’அண்ணன் வீடு திரும்பி விட்டார்’ – மகிழ்ச்சியில் நடிகர் கார்த்தி

Tamil Mint

நடிகர் சங்க தேர்தல் – ஹீரோவின் கையை கடித்த நடிகை…! வைரலாகும் வீடியோ இதோ..!

Lekha Shree

பிசாசு 2 அப்டேட்: ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் First Look!

suma lekha

தனது கணவர் கைது குறித்து ஷில்பா ஷெட்டியின் பரபரப்பு வாக்குமூலம்..!

suma lekha

அவன் எப்பவுமே அப்படி தான் ‘தன்னையே கலாய்க்க சொல்லுவான்’ – எமோசன் ஆன புகழ்!

HariHara Suthan

”எனக்கு ரூ.10 கோடி வரை தருவதாக சொன்னார்கள்”- சினேகன் கூறிய அதிர்ச்சி தகவல்!

HariHara Suthan

மருமகன் தேடிய விவேக்… முந்திக் கொண்ட மரணம்…!

Lekha Shree

“சம்பாதிப்பது கோடி… கொடுப்பது லட்சம்..” – நடிகர் சூர்யாவை விமர்சித்த காயத்ரி ரகுராம்..!

Lekha Shree

தேனீ வளர்ப்புக்கு ஏஞ்சலினா ஜோலி வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

sathya suganthi

ரசிகர்களோடு ரசிகர்களாக அமர்ந்து படம் பார்த்த மாஸ்டர் பட குழுவினர்… முழுவிவரம் இதோ.!

Tamil Mint

இயக்குனர் லிங்குசாமி இயக்கும் படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல ஹீரோ…!

Lekha Shree