நடிகர் ரஜினி, ராகவேந்திர மண்டபத்தில் மீண்டும் அரசியல் கலந்துரையாடல்


அரசியலுக்கு வருவதாக கடந்த 2017ல் கூறிய ரஜினி, கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது அரசியல் வருகையை உறுதிப்படுத்தினார். 

வரும் ஜனவரியில் புதிய கட்சி தொடங்கப்போவதாகவும், டிசம்பர் 31 ஆம் தேதி அதற்கான அறிவிப்பை வெளியிடப்போவதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார். 

மேலும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக முன்னாள் பாஜக நிர்வாகி அர்ஜுன மூர்த்தியையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமித்துள்ளார். 

இதையடுத்து, இன்று தமிழருவி மணியன் மற்றும் அர்ஜுன மூர்த்தி ஆகியோருடன் ராகவேந்திரா மண்டபத்தில் கட்சிப் பணிகள் குறித்து கலந்துரையாடவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Also Read  தன் குடும்பத்தின் மீதான கடனை அடைத்த காந்தியவாதி: தமிழன் விஜய் போல் நிஜத்தில் செய்த நபர்.!

அர்ஜுன மூர்த்தி மற்றும் தமிழருவி மணியனின் புகைப்படங்களை தாங்கிய எந்த சுவரொட்டியோ பதாகைகளோ வெளிவரக்கூடாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கட்சி அலுவலகத்திற்கான இடம் குறித்தும் கட்சியின் பெயர் மற்றும் தேர்தலுக்கான நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பது குறித்தும் ரஜினிகாந்த் விவாதித்தார் எனக் கூறப்படுகிறது. 

Also Read  கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி - முதல்வர் மு.க.ஸ்டாலின்

தனது சகோதரர் சத்தியநாராயணாவிடம் ஆசீர்வாதம் பெற சில நாட்களுக்கு முன்பு பெங்களூருக்கு சென்றிருந்த ரஜினிகாந்த், டிசம்பர் 12 ஆம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். 

அவரது ரசிகர்கள் தலைவரின் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.

Also Read  சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரத்தில் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஊரடங்கு கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்ட மக்கள்… ரெம்டேசிவர் மருந்து வாங்க தள்ளுமுள்ளு!

Lekha Shree

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

Lekha Shree

விமரிசையாக நடைபெற்ற அன்புமணி மகள் திருமணம்..!

suma lekha

சென்னை மூவர் கொலை வழக்கில் 3 பேர் கைது

Tamil Mint

சென்னையில் வலம் வரும் கொரோனா தடுப்பூசி ஆட்டோ!

Shanmugapriya

தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்றார் ஆர்.என்.ரவி…!

Lekha Shree

கும்பகோணத்தில் ஒரே பள்ளியில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா…!

Devaraj

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மீண்டும் சிக்கும் தமிழக அரசு!

Tamil Mint

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு…! எவ்வளவு தெரியுமா?

sathya suganthi

பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் அறிவிப்பு…

Tamil Mint

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு கிடுக்குபிடி – புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

sathya suganthi

இரவு நேர ஊரடங்கு – பேருந்து போக்குவரத்தில் மாற்றம்!

Lekha Shree