புதிய வேளாண் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தபின் விவசாயிகள் வருவாய் இரட்டிப்பாகும்: ராஜ்நாத் சிங்


மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “புதிய வேளாண் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தபின் விவசாயிகள் வருவாய் இரட்டிப்பாகும்” என  தெரிவித்துள்ளார். 

டெல்லி எல்லையில் மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

மத்திய அரசின் சார்பில் 5 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் எவ்வித உடன்பாடு எட்டப்படவில்லை. இதற்கிடையே பேச்சுவார்த்தை நடத்த வருமாறு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று 40 விவசாய சங்கங்கள் வரும் டிசம்பர் 29ம் தேதி காலை 11 மணிக்கு மத்திய அரசுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த ஒப்புக் கொண்டுள்ளன.

ஆனால், நாளை மறுநாள் நடக்கும் கூட்டத்தின் போது மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், வருகிற 30ம் தேதி சிங்கு எல்லையில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாய அமைப்பினர் எச்சரித்துள்ளனர். 

Also Read  பெங்களூருவில் தமிழ் நடிகை ராகினி திவேதி கைது.

இந்நிலையில் இமாசல பிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க. முதல்வர் ஜெய்ராம் தாக்குரின் 3 ஆண்டு கால ஆட்சி நிறைவையொட்டி மாநில மக்களுக்கு காணொலி காட்சி மூலம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். 

அப்போது “இமாசலப் பிரதேசத்தில் மூன்றாண்டு காலமாக முதல்வராக பொறுப்பேற்று சிறப்பாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஸ்ரீராம் தாகூரை நான் பாராட்டுகிறேன்” என வாழ்த்தினார்.

Also Read  என்னா அடி…! காவலர் முன்னிலையில் டேக்சி ஓட்டுநரை தாக்கிய இளம்பெண்..! வைரல் வீடியோ இதோ..!

தொடர்ந்து பேசிய அவர், “புதிய வேளாண் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தபின் விவசாயிகள் வருவாய் இரட்டிப்பாகும். வருவாய் அதிகரிப்பைக் காண அடுத்த ஒன்றரை ஆண்டுகள் விவசாயிகள் காத்திருக்க வேண்டும்.

துரதிஷ்டவசமாக விவசாயத்தைப் பற்றி தெரியாதவர்கள் விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்றனர். குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயத்தை அரசு எப்போதும் நிறுத்த நினைத்தது இல்லை. விளைபொருட்களை விற்பதற்கான மண்டிகள் சிறப்பாக செயல்படுகின்றன” என கூறினார்.

Also Read  “நோ மீன்ஸ் நோ” – காதலுக்கு உதவி கோரியவருக்கு அஜித் பட பாணியில் போலீஸ் பதில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

லட்சுமி விலாஸ் வங்கியின் எஃப்.டி விகிதங்கள் மாறாது: டி.பி.எஸ் வங்கி இந்தியா

Tamil Mint

‘பெட்ரோல் விலை உயரக் கூடாது என்றால் மோடிக்கு வாக்களிக்காதீர்கள்’ – இணையத்தில் வைரலாகும் பில் உண்மையா? #FactCheck

Shanmugapriya

காங்கிரஸ், பாஜக வேறு வேறு அல்ல: விளாசிய பினராயி…!

Devaraj

உத்தரப்பிரதேசத்திலுள்ள அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை வார்டில் சாவகாசமாக படுத்துக்கிடந்த தெருநாய்… வைரல் ஆகி வரும் காணொளி! முழுவிவரம் இதோ.!

Tamil Mint

கேரளாவில் மீண்டும் அரங்கேறிய சோக சம்பவம்: வெடிகுண்டு வீசியதால் காயமடைந்த யானை மரணம்!

Lekha Shree

கொரோனா போன்ற இருண்ட காலங்களில் மக்களுக்கு ஒரு சரியான படமாக உள்ளது – கேப்டன் கோபிநாத்

Tamil Mint

டெல்டா மாவட்டங்களில், நாளை கனமழை பெய்யும்’ என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Tamil Mint

நான்கு கால்களுடன் பிறந்த கோழி குஞ்சு! – வைரலாகும் புகைப்படம்

Shanmugapriya

பிரைவசி பாலிசி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த வாட்ஸ் அப் நிறுவனம்! மத்திய அரசுக்கு விளக்கம்

Tamil Mint

‘ரவுடி பேபி’ பாடல் மெட்டில் புத்தி சொன்ன மருத்துவர்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

ஆங்கிலேயரை மட்டுமின்றி கொரோனாவையும் விரட்டியடித்த 104 வயது முதியவர்…!

sathya suganthi

டெரர் காட்டிய டெல்லி, பதுங்கிய பீஜிங்: எல்லையில் நடந்தது என்ன?

Tamil Mint