a

‘தி பேமிலி மேன் 2’ – நடிகை சமந்தாவை புகழ்ந்த பிரபல முன்னணி நடிகை…!


நடிகை சமந்தா நடித்த ‘தி பேமிலிமேன் 2’ என்ற வெப்தொடர் அமேசான் ப்ரைமில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் அந்த சீரிஸில் நடிகை சமந்தாவின் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளார் மற்றொரு முன்னணி நடிகையான ரகுல் பிரீத் சிங்.

இதுகுறித்து கூறுகையில், “தி ஃபேமிலி மேன் 2 தொடரில் நடித்துள்ள மனோஜ் பாஜ்பாய் நடிப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை. அதேபோல் நடிகை சமந்தா ராஜி கேரக்டரை மிக அற்புதமாக செய்திருக்கிறார்.இந்த தொடரை பார்த்த பிறகு எங்கள் குடும்பமே சமந்தாவின் ரசிகர்களாக மாறிவிட்டோம்” என்று பதிவிட்டுள்ளார் ரகுல் பிரீத் சிங்.

இத்தொடரின் முன்னோட்டம் வெளியான சில நொடிகளில் அதற்கு கடும் எதிர்ப்புகள் எழத்தொடங்கியது. காரணம் தமிழர்களை தீவிரவாதிகளை போல சித்தரித்துள்ளது இப்படம் எனவும் தமிழர்களுக்கு எதிரானது இப்படம் எனவும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்தத் தொடரை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குனர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read  பிரபல முன்னனி ஹீரோ படத்தில் இருந்து விலகிய இயக்குனர் மோகன் ராஜா?

ஆனால், அந்த தொடரில் நடிகை சமந்தா துணிச்சலாக நடித்துள்ளார் என பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

இதனால், பல எதிர்ப்புகள் வந்தாலும் படத்தில் தந்து கேரக்டருக்கு கிடைத்துள்ள பாராட்டுகளை எண்ணி மகிழ்ச்சியில் உள்ளார் சமந்தா.

Also Read  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஃபஹத் ஃபாசில்!!அதிர்ச்சியில் ரசிகர்கள்..

இந்நிலையில் மற்றொரு முன்னணி நடிகையான ரகுல் பிரீத்தி சிங் அவரை பாராட்டியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதனால், சமந்தாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாடலை பாடியது உங்கள் சிம்பு… வெளியானது ‘சுல்தான்’ படத்தின் 2வது பாடல்…!

malar

கார்த்தி ஃபேன்ஸ் ரெடியா?… வெள்ளிக்கிழமை காத்திருக்கும் விருந்து…!

HariHara Suthan

மாஸ்டர் பட இயக்குநருக்கு கொரோனா…! தனியார் மருத்துவமனையில் அனுமதி…!

Devaraj

முட்டாள்தனமான வாதம் – நெட்டிசன் கருத்துக்கு நடிகை பிரியா பவானி சங்கர் பதிலடி!

Lekha Shree

வைரலாகும் ‘குட்டி பட்டாஸ்’ HookStep! நடனமாடி வீடியோ வெளியிடும் ரசிகர்கள்!

Lekha Shree

ராயல் என்பீல்டு பைக்கில் மாஸ் காட்டும் மாளவிகா மோகனன்! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

நடிகர் விவேக்கிற்காக பொதுமக்கள் செய்த நெகிழ்ச்சியூட்டும் காரியம்..!

Devaraj

வாய்ப்புகளை மறுத்த பிரபல நடிகை… அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட நயன்தாரா..!

Lekha Shree

Couples ஆக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ரவுடி ஜோடிகள்…! வைரல் போட்டோ இதோ..!

Lekha Shree

மாஸ்டர் பவானியின் காரை இயக்கிய பவானி! வைரலாகும் புகைப்படம் இதோ!

HariHara Suthan

‘தாலாட்டு’ சீரியலில் இணைந்த ‘செப்பருத்தி’ சீரியல் நடிகை…!

Lekha Shree

அச்சு அசல் நடிகை ரோஜாவை போல் உள்ள அவரது மகள்… வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree