முதுகுளத்தூர் கல்லூரி மாணவன் உயிரிழப்பு – காவல்நிலைய சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!


முதுகுளத்தூர் அருகே காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் காவல் நிலையத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள நீர்க்கோழியேந்தலை சேர்ந்த லட்சுமணகுமார் என்பவரின் மகன் மணிகண்டன் (21) மாலையில் பரமக்குடி-கீழத்தூவல் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த மணிகண்டன் தனது டூவீலரை நிறுத்தாமல் சென்றுள்ளார்.

அவரை விரட்டி சென்று பிடித்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். மணிகண்டனின் டூவீலர் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து விட்டு, இதுகுறித்து அவரது தாயார் மற்றும் சகோதரருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து காவல் நிலையத்திற்கு வந்த இருவரும் மணிகண்டனை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் மணிகண்டனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

Also Read  கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 50,000 இழப்பீடு - அரசாணை வெளியீடு..!

உடனே அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்து உள்ளனர். அப்போது பரிசோதித்தபோது மணிகண்டன் இறந்து போனது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து முதுகுளத்தூர் டிஎஸ்பியிடம் மணிகண்டனின் உறவினர்கள் புகார் அளித்தனர். டிஎஸ்பி உத்தரவின் பேரில் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக மணிகண்டனின் உடல் கொண்டு செல்லப்பட்டது.

Also Read  கொரோனா பாசிட்டீவா? டென்ஷன் ஆகாம 104-க்கு கால் பண்ணுங்க!

இந்நிலையில் போலீசார் தாக்கியதால் தான் மணிகண்டன் உயிரிழந்துள்ளார் என்று கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அதையடுத்து டிஎஸ்பி ஜான் பிரிட்டோ மற்றும் மற்ற போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதில் உடன்பாடு ஏற்படாததால் மணிகண்டனின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதையடுத்து சந்தேக மரணம் 174-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு மணிகண்டனின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. ஆனால், 1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு மணிகண்டனின் உடலை வாங்காமல் திரும்பி சென்றுள்ளனர் அவரது உறவினர்கள். தற்போது மணிகண்டனின் உடல் மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தால் ட்விட்டரில் #JusticeForManikandan என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

Also Read  கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை..!

அதில் பலர் போலீசார் போலீசார் தாக்கியதால் தான் மணிகண்டனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்துள்ளார் என்றும் இதற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காவல் நிலையத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், கல்லூரி மாணவன் மணிகண்டனை போலீசார் தாக்கியதாக காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திமுக பதவிக்கு ஒரு கோடி ரூபாய்: போஸ்டர் ஏற்படுத்திய பரபரப்பு

Tamil Mint

தியேட்டர்கள் இந்த தினங்கள் இயங்க தடை வழங்கவேண்டும் என வழக்கு.!

suma lekha

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்

Tamil Mint

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Tamil Mint

குஷ்பு கைதானதை கண்டித்து பாஜக தலைவர்கள் கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்

Tamil Mint

பலன் தரும் பனை, புயலை தாங்கும் பலம்

Tamil Mint

மாம்பழத்திற்கு பதில் மாட்டுச்சாணம்…… சிறுவர்களுக்கு நடந்த கொடுமை….

VIGNESH PERUMAL

அமைச்சரின் உதவியாளர் காரில் கடத்தல்: பரபரப்பு வீடியோ

Tamil Mint

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: மார்ச் 10 ஆம் தேதி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

Lekha Shree

தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்: இன்று புதிதாக 1,573 பேருக்கு கொரோனா தொற்று!

suma lekha

திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் காலமானார்…!

Lekha Shree

40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த பிரபல யூடியூப்பர்…! மறுபிறவி எடுத்துள்ளதாக கண்ணீருடன் வீடியோ…!

Devaraj